Breaking News

கார் கண்ணாடியை துடைப்பது போல் ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து நூதன கொள்ளையடிக்கும் சிறுவன் என பரவும் வீடியோ??? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கார் கண்ணாடியை துடைப்பது போல் ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஃபாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்து நூதன கொள்ளையடிக்கும் சிறுவன் என பரவும் வீடியோ??? உண்மை என்ன




அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

சிக்னல் ஒன்றின் ஓரத்தில் நிற்கும் காரின் கண்ணாடியை சிறுவன் ஒருவன் துடைக்கிறான் அப்போது, அவன் காரின் கண்ணாடியை துடைத்தபோது கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்ச்யை பாஸ்டேக் க்யூ ஆர் கோடு அருகே கொண்டு சென்றதும் அந்த ஸ்மார்ட் வாட்ச்சில் சிவப்பு நிற விளக்கு எரிகின்றது சிறுவன் காரின் கண்ணாடியை துடைத்து விட்டு இறன்ங்கும் போது காரில் உள்ள நபர் அந்த சிறுவனின் கையில் உள்ள வாட்ச் பற்றி கேட்கும் போது அந்த சிறுவன் அந்த இடத்தில் இருந்து ஓடுகின்றான்காரில் இருந்த நபர் இறங்கி ஓடி அவனை பிடிக்க முயற்சிக்கின்றார் ஆனால் முடியவில்லை இந்த சம்பவம் முழுவதையும் வீடியோவாக பதிவு செய்த அந்த நபர் கார் கண்ணாடியை துடைப்பது போல வந்து பாஸ்டேக்கில் இருந்து பணத்தை நூதன முறையில் கொள்ளையடிப்பதாகவும், இரு வாரங்களுக்கு முன்பு இதேபோன்று தங்களுக் நேர்ந்ததாகவும் கூறியுள்ளார்


உண்மை என்ன? 

பாஸ்டேக் என்றால் என்ன:-

நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கடந்து செல்லும்போது நேர விரயம் ஆவதைத் தடுப்பதற்காக பாஸ்டேக் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை அமைச்சகம் அறிமுகம் செய்தது

இதன்படி வாகனத்தின் முகப்பில் பார்கோடு அடங்கிய பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டவேண்டும். அதன்பிறகு சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும்போது அங்குள்ள கருவிகள் தானாகவே கட்டணத்தை கழித்துக் கொள்ளும் நாம் மொபைல் ரீசார்ஜ் செய்வது போல் பாஸ்டேக்க்கை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்

அதாவது பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் டோல்கேட்டில் மட்டும் தான் பணம் கழிக்கப்படும் வேறு எந்தவகையிலும் அதில் இருந்து பணம் எடுக்கமுடியாது என்பதுதான் உண்மை


பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, 

அதில் 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் காரின் கண்ணாடியை துடைக்கும் சிறுவன் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் அருகே சிறுவன் துணியால் துடைக்கும் போது கையில் இருக்கும் ஸ்மார்ட் வாட்ச் சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றது என்பதே அதில் நாம் அனைவரும் அந்த வீடியோவை நம்பவைக்கின்றது


ஆனால் அந்த வீடியோவில் காரின் கண்ணாடியை துடைக்கும் சிறுவன் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் அருகே சிறுவன் துணியால் துடைக்கும் போது கையில் இருக்கும் ஸ்மார்ட் வாட்ச் சிவப்பு நிறத்தில் ஒளிர்வது அந்த ஸ்மார்ட் வாட்சில் உள்ள நேரத்தை தான் காட்டுகின்றது

பொதுவாக ஸ்மார்ட் வாட்ச் திரையில் ஏதேனும் படும் போது ஒளிர்வது தான் அதன் இயல்பு

அதனை வைத்து பாஸ்டேக்கில் இருந்து பணம் போய்விட்டது என் பரப்புவது பொய்யானது ஆகும்

பாஸ்ட் டாக் வீடியே கிளிப் சம்மந்தமான சந்தேகங்கள்

1. முதல் வாரம் இது போன்று கார் கண்ணாடி துடைக்கும் போது திருடப்பட்ட பணத்திற்க்கு எந்த விதமான ஆதாரத்தையும் அதாவது அவரது பேடியம் வேலட்டில் நடந்த பரிவர்தனையை ஆதாரமாக காட்ட வில்லை

2 மறு முறை வரும் போது இவர்களை பிடிக்க வேண்டும் எண்ணத்தில் வருபவர்கள் அந்த பையனை பிடிக்க வேண்டும் என்று முடிசெய்து வருபவர்கள் ஏன் கார் கண்ணாடி துடைத்து பிறகு அவன் கதவு அறுகில் வந்து கையை கதவில் வைத்து கொண்டு சில வினாடிகள் நிற்க்கும் போது ஏன் பிடிக்க வில்லை அல்லது ஒருவர் இறங்கி சென்று துடைக்கும் போதே பிடிக்க முயற்ச்சி செய்ய வில்லை

3 இரண்டாம் தடவை துடைக்கும் போது காசை திருடியதற்க்கும் எந்த ஆதாரத்தையும் காட்ட வில்லை

4 வீடியேவில் கார் சீட்டில் இருக்கும் அவர் செல்லும் போது இப்ப பாருங்க துடைத்து சென்று இருக்கின்றான் இன்னும் கொங்சம் நேரத்தில் பாஸ் டாக் பேட்டியமில் இருக்கும் பைசா முழுவது காலி என செய்தி வரும் என்று சொன்னாவர் அதற்க்கு எந்த ஆதாரமும் காட்ட வில்லை 

5 பையன் துடைக்கும் போது ஸ்மார்ட் வாட்ச் கட்டி இருக்கும் கையை திருப்பி டேக் ஸ்டிகரை துடைக்கும் வீடியேவை மீண்டும் மீண்டும் போட்டு காமித்து விடியேவை எடிட் செய்து அதனுடன் போட்டி கொடுக்கும் இவர் ஏன் அதனுடன் திடுடப்பட்ட காசுக்கான மொஸ்சேஜ் ஆதாரத்தை வீடியேவில் காட்ட வில்லை

இந்த வீடியோ ஒரு முன் எற்பாடாக எடுக்கப்பட்ட வீடியோ போன்று உள்ளது என்ற சந்தேகத்தில்  இந்த வீடியோ குறித்து தேடும் போது அந்த வீடியோ எடுத்தவர்கள் பிரபல யூடியுபர்கள் என தெரியவந்தது , மேலும் அவர்களது https://www.youtube.com/c/BakLolVideo/videos யூடியுப் பக்கத்தில் பேஸ்புக் பக்கத்தில் இது போல் எடுக்கபட்ட வீடியோக்கள் பல உள்ளது. https://www.facebook.com/baklolvideo மேலும் அவர்கள் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட இந்த பாஸ்ட்டேக் வீடியோவை தற்போது டிலைட் செய்துள்ளார்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

இது குறித்து பாஸ்டேக் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 

பாஸ்டேக் பணப்பரிவர்த்தனை அங்கீகரிக்கப்பட்ட டோல்கேட் மற்றும் டோல்ப்ளாசா பார்க்கிங் கருவியில் மட்டுமே நடைபெறும். 

அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கருவியும் பாஸ்டேக் பணப்பரிவர்த்தனையை செய்ய முடியாது. எனவே, பாஸ்டேக் மிகவும் பாதுகாப்பானதே என்று பதில் அளித்துள்ளது. 

பேடிஎம்  தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் 

ஸ்மார்ட்வாட்ச் ஸ்கேன் செய்யும் FASTagஐ தவறாகக் காட்டும் ஒரு வீடியோ Paytm FASTag பற்றிய தவறான தகவலைப் பரப்புகிறது. NETC வழிகாட்டுதல்களின்படி, FASTag கட்டணங்களை அங்கீகரிக்கப்பட்ட வணிகர்களால் மட்டுமே தொடங்க முடியும். Paytm FASTag முற்றிலும் பாதுகாப்பானது  என தெரிவித்துள்ளது


https://twitter.com/FASTag_NETC/status/1540621020997877760

https://twitter.com/FASTag_NETC/status/1540306911899549697

https://twitter.com/Paytm/status/1540571468450344961

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback