அரியலூர் மாவட்டத்தில் விமான விபத்து?... வீண் வதந்தியை நம்ப வேண்டாம்
அரியலூர் மாவட்டத்தில் விமான விபத்து ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் தவறானது என்றும், அதனை யாரும் நம்ப வேண்டாம்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே குழுமூர் மற்றும் வங்காரம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு வனக்காட்டில் நேற்று மாலை திடீரென அதிக சத்தம் கேட்டதாகவும், இதனால் அந்த பகுதியில் விமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதாக அப்பகுதியில் பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் விமான விபத்து ஏற்பட்டதாகவும் அரியலூரில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டு விட்டதாக புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. அதில், “விபத்து ஏற்பட்ட ஹெலிகாப்டர் தீவிரமாக கண்டுபிடிக்கப்பட்டது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் பாரஸ்ட் காடுகளில் பகுதியில் நீண்ட நேரம் தேடி விபத்து சிக்கிய தற்போது 4.40 மணி அளவில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீட்பு பணி தீவிரம்.” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது
ஆனால் அந்த செய்தி உண்மையில்லை
உண்மை என்னவென்றால் கடந்த 2014ஆம் ஆண்டு உத்திரபிரதேசம் பரேலியில் இருந்து அலகாபாத் நோக்கிச் சென்ற விமானப்படைக்கு சொந்தமான ALH துருவ் ரக ஹெலிகாப்டர் உத்தரப்பிரதேச மாநிலம் சிதாபூரில் விழுந்து நொறுங்கியதில் இரண்டு அதிகாரிகள் உட்பட ஏழு இந்திய விமானப்படை வீரர்கள் உயிரிழந்தனர். அந்த விமான விபத்து புகைப்படத்தை எடுத்து அரியலூர் விமான விபத்து என பொய்யாக பரப்புகின்றார்கள்
அதனை தொடர்ந்து விமான விபத்து தொடர்பாக பொய்யாக வதந்தி பரவுவதை தடுக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி அவர்கள் கூறுகையில்,
தவறாக பரப்பப்படும் தகவல்களை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும், அச்சமடைய தேவையில்லை என்றும் தெரிவித்தார். மேலும்,விமான விபத்து ஏற்பட்டதாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் யாரும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் அரியலூர் மாவட்ட காவல் துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்ட காவல்துறை சத்தத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருவதாகவும், இதுவரை விமான விபத்து நடைபெற்றததற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.இது குறித்து விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டதில், எந்த விமான விபத்தும் நடைபெறவில்லை எனவும், அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும் தெரிவித்ததுள்ளனர். மேலும், பயிற்சி விமானங்கள் தாழ்வாக பறக்கும்போது அதிக சத்தம் கேட்பது வழக்கமான ஒன்றுதான் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே விமான விபத்து ஏற்பட்டதாக பரவி வரும் வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags: FACT CHECK