Breaking News

FACT CHECK முகமது நபிக்கு எதிரான கருத்துக்களுக்கு இந்தியா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இந்தியா செல்ல மாட்டேன் என கூறினாரா மொயீன் அலி உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி  அவர்கள் முகமது நபிக்கு எதிரான அவமானகரமான கருத்துக்களுக்கு இந்தியா மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் மீண்டும் ஒரு போட்டியில் விளையாட இந்தியா செல்ல மாட்டேன், ஐபிஎல்லையும் புறக்கணிப்பேன். மேலும் எனது சக முஸ்லிம் சகோதரர்களும் அவ்வாறே செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் முஹம்மது நபியை நேசிக்கிறேன் என  ஒரு டிவிட்டர் புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி  அவர்கள் முகமது நபிக்கு எதிரான அவமானகரமான கருத்துக்களுக்கு இந்தியா மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் மீண்டும் ஒரு போட்டியில் விளையாட இந்தியா செல்ல மாட்டேன், ஐபிஎல்லையும் புறக்கணிப்பேன். மேலும் எனது சக முஸ்லிம் சகோதரர்களும் அவ்வாறே செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் முஹம்மது நபியை நேசிக்கிறேன் என  ஒரு டிவிட்டர் புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த டிவிட்டர் கருத்து குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த புகைப்படத்தை  ஆராய்ந்தது, மேலும் அந்த புகைப்ப்டத்தை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இல்லை என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 



முழு விவரம்:-

கடந்த வாரம் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, கியான்வாபி மசூதி தொடர்பான விவாதத்தின் போது முகமது நபிகள் குறித்து சர்ச்சையான முறையில் அவதூறான வகையில் பேசினார். தொடர்ந்து, மற்றொரு பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டாலும் தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைகுரிய வகையில் ட்வீட் செய்திருந்தார். நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். அது மட்டுமின்றி அவர்மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நபிகள் குறித்ததான சர்ச்சை கருத்து காரணமாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி பா.ஜ.க-வின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது பா.ஜ.க

மேலும் இந்த செய்தி இது அரபு நாடுகளுக்கும் பரவத் தொடங்கி பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது பாஜக . சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் முகமது நபி பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு தீவிர கண்டத்தை தெரிவித்துள்ளார்கள்

இந்நிலையில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயீன் அலி  அவர்கள் முகமது நபிக்கு எதிரான அவமானகரமான கருத்துக்களுக்கு இந்தியா மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நான் மீண்டும் ஒரு போட்டியில் விளையாட இந்தியா செல்ல மாட்டேன், ஐபிஎல்லையும் புறக்கணிப்பேன். மேலும் எனது சக முஸ்லிம் சகோதரர்களும் அவ்வாறே செய்யும்படி வேண்டுகோள் விடுக்கிறேன். நான் முஹம்மது நபியை நேசிக்கிறேன் என  ஒரு டிவிட்டர் புகைப்படத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

ஆனால் அந்தப் டிவிட்டரில் வரும் செய்தி புகைப்படம் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி அவர்களின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு இல்லை, மேலும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு டிவிட்டரில் அக்கவுண்ட் இல்லை.

மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் பொய்யானது என தெரிந்து அந்த டிவிட்டர் அக்கவுண்டை டிவிட்டர் நிறுவனம் தடை செய்துள்ளது


முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://mobile.twitter.com/Moeen_Ali18

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback