FACT CHECK நுபுர் சர்மா கைது என பரவும் வீடியோ உண்மை என்ன????
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் நபிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பிய நுபுர் சர்மா கைது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் நபிகள் நாயகம் பற்றி அவதூறு பரப்பிய நுபுர் சர்மா கைது என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள். அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, நபிகள் குறித்ததான சர்ச்சை கருத்து காரணமாக பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், டெல்லி பா.ஜ.க-வின் ஊடகப் பொறுப்பாளர் நவீன்குமார் ஜிண்டாலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது பா.ஜ.க
மேலும் இந்த செய்தி இது அரபு நாடுகளுக்கும் பரவத் தொடங்கி பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது பாஜக . சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் முகமது நபி பற்றிய சர்ச்சைப் பேச்சுக்கு தீவிர கண்டத்தை தெரிவித்துள்ளார்கள். வளைகுடா நாடுகள், இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனது.சர்ச்சைப் பேச்சு பேசிய நூபுர் சர்மா உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக கேள்விகள் எழுப்பினர். இந்நிலையில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை அவர்கள் கைது செய்யப்படவில்லை
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் ஓர் வீடியோவை ஷேர் செய்து நுபுர் சர்மா கைது என பரப்பிவருகின்றார்கள்..
அப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அந்த செய்தி உலகம் முழுவதும் தெரிந்திருக்கும், தற்போதுவரை எந்த ஒரு மீடியாவிலும் நுபுர் சர்மா கைது என ஒரு தகவலும் இல்லை என்பது தான் உண்மை
Tags: FACT CHECK மறுப்பு செய்தி