Breaking News

தமிழ்நாட்டில் குளிர் அதிகரிக்கும் என்று பரவும் தகவல் உண்மையில்லை -சென்னை வானிலை ஆய்வு மையம்

அட்மின் மீடியா
0

 தமிழ்நாட்டில் குளிர் அதிகரிக்கும் என்று பரவும் தகவல் உண்மையில்லை -சென்னை வானிலை ஆய்வு மையம் 



கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  

நாளை முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே அல்பெலியன் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இது நாளை காலை 5-27 மணிக்கு தொடங்கும்.Alphelion Phenomenon இன் விளைவுகளை நாம் பார்ப்பது மட்டுமல்லாமல் அனுபவிப்போம்.'இது ஆகஸ்ட் 2022 இல் முடிவடையும்.'இந்த நேரத்தில் நாம் முன்பு எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலையை அனுபவிப்போம்.. இதனால்.. நம் உடலில் வலி உண்டாவதோடு தொண்டை அடைப்பு, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் உண்டாகும். எனவே, வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது. என பரவும் தகவல் உண்மையில்லை என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது

இது குறித்து தன் டிவிட்டர் பக்கத்தில் 

சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் நகர்வு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கடும் குளிர் அலை எச்சரிக்கை விடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருவது ஆனால் சென்னை வானிலை ஆய்வுமையம் அப்படி எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. என தெரிவித்துள்ளது


FACT CHECK  நாளை முதல் அல்பெலியன் நிகழ்வு என வாட்ஸப்பில் பரவும் தகவல் உண்மை என்ன ... முழு விவரம்...தெரிந்து கொள்ள


Tags: FACT CHECK எச்சரிக்கை செய்தி

Give Us Your Feedback