Breaking News

FACT CHECK கோபிசெட்டிபாளையத்தில் உள்ளூர் தமிழர்களுக்கு வேலை தர வட மாநிலத்தவர்கள் எதிர்ப்பு என பரவும் செய்தி உண்மை என்ன?

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ளூர் தமிழ் பணியாளர்களுக்கு வேலை வழங்க வடமாநிலத்தவர்கள் எதிர்ப்பு: அவர்களால் வடமாநிலத்தவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டம் என்று  ஒன் இந்தியா நியூஸ் கார்டை  பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 
 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
 
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ளூர் தமிழ் பணியாளர்களுக்கு வேலை வழங்க வடமாநிலத்தவர்கள் எதிர்ப்பு: அவர்களால் வடமாநிலத்தவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டம் என்று  ஒன் இந்தியா நியூஸ் கார்டை  பலரும் வாட்ஸப் பேஸ்புக், டிவிட்டர் என ஷேர் செய்து  வருகின்றார்கள். 
 

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த ஒன் இந்தியா நியூஸ்கார்டை நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு ஆராய்ந்தது, மேலும் அந்த செய்தியை பற்றி கூகுளில் தேடிய போது  பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது எனவும் ஒன் இந்தியா செய்தி நிறுவனம் தெரியாமல் அந்த செய்தியினை கடந்த 30.06.2022 அன்று டிவிட்டரில் பதிவிட்டது பின்பு  அதே ஒன் இந்தியா 1.07.2022 அன்று தன் ட்விட்டரில் விளக்கம் அளித்து டிவிட் செய்துள்ளது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது .மேலும் உண்மை தெரியாமல் சில செய்தி இணையதளங்களும் செய்தி வெளியிட்டு இருந்தது

பழைய செய்தி:-


புதிய செய்தி:-






முழு விவரம்:-

கோபிசெட்டிபாளையம் அருகே தனியார் நூற்பாலையில் 100க்கும் மேற்பட்ட வட மாநிலத்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன் இங்கு பணிபுரிந்து வந்த ஒடிசாவைச் சேர்ந்த தொழிலாளி கசரப், என்பவர் காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது குறித்து கோபி காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன தொழிலாளி கசரப் என்பவரைத் தேடி வருகின்றனர். 

இந்நிலையில் நூற்பாலை நிர்வாகம் காணாமல் போன வட மாநில தொழிலாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், அதை கண்டித்து அங்கு பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து போலீசார் கூறுகையில் தொழிற்சாலையில் பணியாற்றி ஒடிசா தொழிலாளியை கண்டுபிடிக்கக்கோரி பிற தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ”ஆனால் தமிழ்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதை கண்டித்து பீகார் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது என்பது தவறு” என கோபிசெட்டிபாளையம் காவல்துறையினர் தெரிவித்தனர். என ETVBHARATH செய்தி வெளியிட்டுள்ளது மேலும் அந்த போராட்ட வீடியோவையும் ஷேர் செய்துள்ளார்கள் என வே பலரும் ஷேர்செய்யும் அந்த செய்தி பொய்யானது என நாம் அறியமுடிகின்றது

முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்




Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback