Breaking News

FACT CHECK கள்ளக்குறிச்சி பள்ளி வீடியோ என பரவும் பொய்யான வீடியோவை யாரும் நம்பாதீர்கள் ஷேர் செய்யாதீர்கள்- முழு விவரம்...

அட்மின் மீடியா
0


சமூக வளைதளங்களில் பொய்யான செய்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை 



கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் இறந்துபோனது சம்மந்தமாக நள்ளிரவில் பள்ளியில் மர்மநபர் ஒருவர் நடந்து செல்வது போன்ற வீடியோ காட்சி சமூகவளைதளத்தில் பரவிவருகிறது. இது சம்மந்தமாக விசாரணை செய்த போது இந்த வீடியோ சேலம் மாவட்டம், வாழப்பாடி காவல் நிலையம், சிங்கபுரம் அரசு பள்ளியில் உள்ள மடிகணினியை திருடமுயற்ச்சி செய்த சம்பவம் தொடர்பான CCTV வீடியோ என்று தெரியவருகிறது .

இந்த சம்பவத்தை வேறு விதமாக திசைதிருப்பி கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்த சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பொய்செய்தியை மக்கள் மத்தியில் கிளர்ச்சியை உறுவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பரப்பிவருகின்றனர். இதுபோன்ற சட்டம் ஒருங்கு சீர்கேடு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். 


கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு முழு விவரம்:-

https://www.facebook.com/photo/?fbid=435313898609194&set=a.376775627796355


https://twitter.com/klkpolice/status/1548950894150324225

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback