FACT CHECK பள்ளி பேச்சு போட்டியில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி என பரவும் வீடியோ உண்மை என்ன.......
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ என இரண்டு வீடியோக்களை பலரும் ஷேர்செய்து வருகின்றார்கள்.
கள்ளகுறிச்சி மாவட்டம் கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி ஜூலை 13ஆம் தேதி இரவு பள்ளியின் விடுதி மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக பெற்றோரும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் போராட்டம் வன்முறையாக வெடித்தது . இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டு நிலையில் , ஜூலை 31ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி தாலுக்கா சின்னசேலம் நயினார் பாளையத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவி மரணம் தொடர்பாக அப்பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி வேதியியல் ஆசிரியர் ஹரிப்பிரியா, கணித ஆசிரியர் கிருத்திகா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் கலவரத்தில் ஈடுபட்ட 300க்கும் மேரற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்
கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி பேச்சுப் போட்டிகளில் பங்கேற்ற வீடியோ என சில வீடியோக்களை பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அட்மின் மீடியா ஆதாரம்:-
https://www.youtube.com/watch?v=B-x_h8M-2Rw
அட்மின் மீடியா ஆதாரம்:-
https://www.youtube.com/channel/UChBcyMil19_dYnhDErATToA/videos
அட்மின் மீடியா ஆதாரம்:-
https://www.youtube.com/watch?v=CW_f2oKz_mA
Tags: FACT CHECK மறுப்பு செய்தி