Breaking News

FACT CHECK நாளை முதல் அல்பெலியன் நிகழ்வு என வாட்ஸப்பில் பரவும் தகவல் உண்மை என்ன ... முழு விவரம்...

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  

நாளை முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே அல்பெலியன் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இது நாளை காலை 5-27 மணிக்கு தொடங்கும்.Alphelion Phenomenon இன் விளைவுகளை நாம் பார்ப்பது மட்டுமல்லாமல் அனுபவிப்போம்.'இது ஆகஸ்ட் 2022 இல் முடிவடையும்.'இந்த நேரத்தில் நாம் முன்பு எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலையை அனுபவிப்போம்.. இதனால்.. நம் உடலில் வலி உண்டாவதோடு தொண்டை அடைப்பு, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் உண்டாகும். எனவே, வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது.

சாதாரணமாக சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி கி.மீ.ஆனால் அல்பெலியன் நிகழ்வினால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 15 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக அதிகரிக்கும். அதாவது 66 சதவீதம் அதிகரிக்கும்

என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-

நாளை முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை காலநிலை கடந்த ஆண்டை விட குளிராகவும், குளிர்ச்சியாகவும் இருக்கும். இதுவே அல்பெலியன் நிகழ்வு என்று அழைக்கப்படுகிறது. இது நாளை காலை 5-27 மணிக்கு தொடங்கும்.Alphelion Phenomenon இன் விளைவுகளை நாம் பார்ப்பது மட்டுமல்லாமல் அனுபவிப்போம்.'இது ஆகஸ்ட் 2022 இல் முடிவடையும்.'இந்த நேரத்தில் நாம் முன்பு எப்போதும் இல்லாத குளிர்ந்த வானிலையை அனுபவிப்போம்.. இதனால்.. நம் உடலில் வலி உண்டாவதோடு தொண்டை அடைப்பு, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகள் உண்டாகும். எனவே, வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான உணவுப் பொருட்களுடன் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது நல்லது.

சாதாரணமாக சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தூரம் 9 கோடி கி.மீ.ஆனால் அல்பெலியன் நிகழ்வினால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் 15 கோடியே 20 லட்சம் கி.மீ. ஆக அதிகரிக்கும். அதாவது 66 சதவீதம் அதிகரிக்கும்

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த செய்தியினை ஆராய்ந்தது, மேலும் அந்த செய்தி பற்றி தெரிந்து கொள்ள  கூகுளில் தேடிய போது 
 இது பற்றி அறிவியல் ஆய்வாளர்கள் என்ன சொல்கின்றார்கள் என தேடியபோது கீழ் உள்ள தகவல்களை அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

அல்பெலியன் நிகழ்வு  என்றால் என்ன:-

சூரியனை சுற்றி வரும் பூமி வட்டப்பாதையில் சுற்றவில்லை. சற்றே நீளமான ஒரு நீள்வட்டப் (elliptical) பாதையில்தான் சூரியனைச் சுற்றுகிறது. ஒரு சுற்றில் பூமி இரு கட்டங்களை இந்த நீள்வட்டப்பாதையில் அடையும். 

ஒன்று, சூரியனுக்கு நெருக்கமானக் கட்டம். 

இரண்டு, சூரியனுக்கு தூரமானக் கட்டம். 

நெருக்கமாக வரும் கட்டத்தை பெரிஹீலியன் (Perehelion) என்கிறார்கள். 

தூரமானக் கட்டத்தை அல்ஃபீலியன் (Alphelion) என்கிறார்கள். 

இது ஒவ்வொரு ஆண்டும் 2 முறை நடக்கிற இயல்பான நிகழ்வு தான்  சூரியனை பூமி ஒரு முழுச் சுற்று சுற்றி வருவதற்க்கு 365 நாட்கள் ஆகும் அதாவது ஒருவருடம் ஆகவே எல்லா வருடங்களிலும் சூரியனுக்கு அருகேயும் தூரத்துக்கும் பூமி சென்று வரும் கட்டங்கள் நேர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 

வழக்கமாக பெரிஹீலியன் கட்டம் ஜனவரி மாதத்திலும் அல்ஃபீனியன் கட்டம் ஜூலை மாதத்திலும் நேர்கிறது. எனவே எல்லா காலங்களில் ஏற்படுகிற வழக்கமான குளிரும் வெப்பமும்தான் இந்த வருடமும் நேரும். 

அப்படி நேராமல் அதிகக் குளிரோ அதிக வெப்பமோ மழையோ நேர்ந்தால் அதற்குக் காரணம் ஒன்றுதான்.காலநிலை மாற்றம்! காலநிலை மாற்றத்துக்கானக் காரணம் அஃபீலியனோ பெரிஹீலியனோ இல்லை, 

பொதுவாக இந்த அல்பெலியன் நிகழ்வு பற்றி இணையத்தில் தேடினால் பல முண்ணனி செய்தி நிறுவனங்கள், பத்திரிக்கைகள் கூட இந்த செய்தியினை உண்மை என் நம்பி செய்தி வெளியிட்டுள்ளார்கள். 

ஆனால் இது அல்பெலியன் நிகழ்வு அல்ல. இதன் உண்மையான பெயர் ‘அப்ஹீலியன்’. அதாவது, சூரியனிலிருந்து பூமி அருகில் உள்ள தூரம் ‘பெரிஹீலியன்’ (சூரிய அண்மை நிலை). இது 14 கோடியே 73 லட்சம் கி.மீ. ஆகும். அதுவே பூமி, சூரியனிலிருந்து தொலைவில் உள்ள தூரம் ‘அப்ஹீலியன்’ (சூரிய சேய்மை நிலை) எனப்படும்.இது 15 கோடியே 21 லட்சம் கி.மீ. ஆகும். இவற்றுக்கு இடையே உள்ள உண்மையான வித்தியாசம் 3.3 சதவீதம். ஆனால் இணையத்தில் பரவும் செய்தியில் 66 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி உண்மை அல்ல என்று தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக அந்த இயக்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.ஆர்.சேதுராமன் அவர்கள் தன் டிவிட்டர்பக்கத்தில் 

பூமி சூரியனை விட்டு அதிகபடமாக விலகி போவதால் குளிர் அதிகரிக்காது என்பது தவறான் தகவல்

பூமியின் காலநிலை மாறுவதற்கு காரணம் பூமி சாய்வான அச்சில சூரியனை சுற்றி வருவதுதான், உண்மையில் வட அரைகோளத்தில் வசிக்கும் நமக்கு குளிர் காலம் ஏற்படுவது பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் டிசம்பர் , ஜனவரி மாதம் தான் என பதிவிட்டுள்ளார்

https://mobile.twitter.com/SETHURAMANVEMUR/status/1543663143632584704

பிரபல யூடிபர் ஜி கே தன் டிவிட்டர் பக்கத்தில்:-

பூமியின் சாய்ந்த கோணம் தான் பருவநிலை மாற்றத்திற்கு காரணமே தவிர, பூமி சூரியனை விட்டு தூரம் போவதாலோ அருகில் வருவதாலோ பூமியின் வெப்பநிலை மாறாது. உடலில் வலி தொண்டை வலி வரும் என்பதெல்லாம் கதைஇதுபோன்ற வதந்திகளின் உண்மைத்தன்மை அறியாமல் பரப்பும் செய்தி ஊடகத்திடம் இருந்து உஷார் மக்களே! என பதிவிட்டுள்ளார்

https://twitter.com/Mr_GK_Tamil/status/1543939360084484097

முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

https://www.snopes.com/fact-check/aphelion-phenomenon-more-sickness/

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback