யுபிஐ பண பரிமாற்ற சேவைக்கு கட்டணம் விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை -மத்திய நிதியமைச்சகம் விளக்கம்
இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி கடந்த 2016 ஆண்டு அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது.
டெபிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் என்பதன் சுருக்கம்தான் UPI, தற்போது UPI பரிவர்த்தனைகளுக்கு பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் யுபிஐ சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் யுபிஐ நிதிப் பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிப்பது குறித்து வங்கி ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது மத்திய நிதியமைச்சகம் தன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது
அதில் UPI பண பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கப்படும் என்ற தகவல் பரவி வந்த நிலையில், அதுபோன்று எவ்வித கட்டணமும் வசூலிக்கும் பரிசீலனை மத்திய அரசிடம் இல்லை என்றும் யுபிஐ சேவையை வழங்கும் நிறுவனங்கள் மற்ற வழிகள் மூலம் செலவுகளை ஈட்டிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்