கேரள கலெக்டர் பிராமணர் என்பதால் போராட்டம் நடத்திய முஸ்லீம்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன!!!!
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கேரளாஈள் கலெக்டர் பிராமணர் என்பதால் போராட்டம் நடத்திய முஸ்லீம்கள் என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்ரீராம் வெங்கடராமன் என்ற ஐஏஎஸ் அதிகாரி குடிபோதையில் ஓட்டி வந்த கார் கேரள பத்திரிக்கையான சிராஜ்ஜில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் பஷீரின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பத்திரிகையாளர் பஷீர் உயிரிழந்துள்ளார் மேலும் அந்த விபத்து நிகழ்ந்த போது ஸ்ரீராம் வெங்கடராமன் நில அளவை மற்றும் நில பதிவேடுகள் துறை இயக்குநராக இருந்தார்
அதன்பின்பு வழக்கு பதிவு செய்து குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தது காவல்துறை ஆனால் இன்னும் வழக்கு விசாரனை தொடங்கவில்லை என கூறப்படுகின்றதுமேலும் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீராம் வெங்கடராமனை ஆலப்புழாவின் மாவட்ட ஆட்சியாராக இடமாற்றம் செய்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
பஷீர் ம்ரணத்திற்க்கு காரணமான ஶ்ரீராம் வெங்கட்ராமை ஆலப்புழை மாவட்டத்தின் ஆட்சியராக நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவின் பத்திரிகையாளர் சங்கமான KUWJ மற்றும் மாவட்ட காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன. அதன் அடிப்படையில் போராட்டங்கள் நடந்தன
மக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து ஶ்ரீராம் வெங்கட்ராமன் ஆலப்புழை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்ட உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, அவர் நுகர்பொருள் வாணிப கழகத்தின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார் .
பத்திரிகையாளர் பஷீர் மரணத்திற்க்கு காரணமான ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமனின் நியமனத்திற்கு அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முஸ்லீம் அமைப்புகள் மட்டுமல்லாமல் பிற அமைப்பினர் மற்றும் கட்சியினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது
மலப்புரம் ஆட்சியராக இந்து நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் தவறானது.மேலும் தற்போது புதிய மாவட்ட ஆட்சியராகவும் ஓர் இந்துவே நியமிக்கப்பட்டு உள்ளார்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி