FACT CHECK வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி என பரவும் செய்தி உண்மை என்ன? முழு விவரம்
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் வீட்டு வாடகைக்கு 18% ஜிஎஸ்டி வரி என ஒரு செய்தினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
ஒரே நாடு, ஒரே வரி என்ற கொள்கையின் அடிப்பையில் மத்திய அரசு கடந்த 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி வரியைக் கொண்டு வந்தது. அதன்படி நாடு முழுவதும் ஒரே வரி வசூல் முறை வசூலிக்கப்படுகிறது
பொருட்களுக்கான வரி விகிதங்கள் குறித்து முடிவு செய்ய இதற்காகத் தனியாக ஜிஎஸ்டி கவுன்சிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கவுன்சில் அவ்வப்போது கூடி ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்றி அமைப்பது குறித்துப் பரிந்துரைக்கும்.
அந்த பரிந்துரையின் அடிப்படையில் ஜிஎஸ்டி வரிகளில் மத்திய அரசு மாற்றங்களை அறிவிக்கும். இந்நிலையில் வர்த்தகரீதியான இடங்கள், அலுவலகங்கள், காலி இடங்களை வாடகைக்கோ அல்லது லீசுக்கோ வழங்கினால் அதற்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால், வீட்டு குடியிருப்புகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ அல்லது தனிநபர்களுக்கோ வாடகைக்கு விட்டிருந்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் 29-ம் தேதி நடைபெற்ற 47வது ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரையின் படி‘குடியிருப்புக் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து, அதில் தொழில் நடத்தும் தனி நபர் அல்லது நிறுவனம், ஜிஎஸ்டி.,யின் கீழ் பதிவு செய்திருக்கும்பட்சத்தில் அவர்கள், வாடகை செலுத்தும்போது 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும்.
இந்த 18 சதவீதம் வரியை வாடகைதாரர் அல்லது கட்டிட உரிமையாளர் என யாரேனும் ஒருவர் அவர்களுக்குள் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி செலுத்த வேண்டும். இந்த விதிமுறை கடந்த ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்குவந்துள்ளது.
ஆனால் புதிய விதியின்படி, ஜிஎஸ்டியின் கீழ் வாடகைதாரர் பதிவு செய்திருந்தால், அவர் ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிஸம் விதியின் கீழ் 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும்.
மேலும் இந்த 18 சதவீத வரியை வாடகைதாரர் இன்புட் டேக்ஸ் கிரெடிட் மூலம் கழித்துக்கொள்ளலாம்.
இந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரி ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்யப்பட்ட வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும், அவர் ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வீட்டின் உரிமையாளர் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.
ஆனால், இவர்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து ஒருவர் பயன்படுத்தும்பட்சத்தில் அதற்கு இந்த வரிவிதிப்பு பொருந்தாது,’ என்று புதிய அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இந்த விதிமுறை ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும்.
இதனை சிலர் தவறாகப் புரிந்துகொண்டு, வாடகைக்கு இருக்கும் அனைவருக்குமே 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது என்று வதந்தி பரப்பி வருகின்றனர்.
எனவே உங்கள் வீட்டை வணிக நோக்கிலான வாடகைக்கு விட்டால் மட்டுமே ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என்றும் சொந்த பயன்பாட்டிற்காக பொதுமக்கள் வீட்டை வாடகைக்கு எடுத்துக் குடி இருந்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்றும் அதேபோல் தனி நபருக்கு வாடகைக்கு விட்டாலும் ஜிஎஸ்டி வரி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இதுபற்றி மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடக நிறுவனமான PIB FactCheck தன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://twitter.com/PIBFactCheck/status/1558006218312265728
Tags: FACT CHECK மறுப்பு செய்தி