FACT CHECK கடல் கன்னி என பரவும் வீடியோ உண்மையா? பொய்யா? முழு விவரம்
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கடல் கன்னி வீடியோ என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையில் நடந்தது கிடையாது அது ஒரு கம்யூட்டர் கிராபிக்ஸ் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ JJPD Production எனும் யூடியூப் சேனலில் கடந்த 17.07.2022 அன்று Aterradora Sirena captada en video 2022 - Real o mito? என்ற தலைப்பில் அவர்கள் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்
மேலும் அந்த வீடியோவின் கீழ் உள்ள டிஸ்கிரிப்ஷனில் இந்த வீடியோக்கள் பொழுதுபோக்குக்காக எங்களால் உருவாக்கப்பட்டது. இதில் காட்டப்படும் படங்கள் அனைத்து கற்பனை. சிஜிஐ டிசைன் மற்றும் கடல் கன்னி 3டி-ல் உருவாக்கப்பட்டது ” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி