FACT CHECK எமிரெட்ஸ் விமான நிறுவனம் இலவச விமான டிக்கெட் என்று பரவும் லின்ங் யாரும் நம்பாதீங்க
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் எமிரெட்ஸ் விமான நிறுவனம் இலவச விமான டிக்கெட் என்று ஒரு லின்ங்கை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த லின்ங் குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த லின்ங்கை ஆராய்ந்தது, மேலும் எமிரெட்ஸ் அதிகார பூர்வ இணையதளத்தில் சென்று பார்த்ததில் அதுன் போல் எந்த ஓர் செய்தியும் அதில் இல்லை
மேலும் இணையத்தில் தேடியதில் கலீஜ் டைம்ஸ் வெளியிட்ட செய்தி கண்ணில் பட்டது அதில்
எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விடுமுறைக் கொண்டாட்ட இலவச விமான டிக்கெட் சம்மந்தமாக சமூக- வலைதளங்களில் பரவும் செய்தி உண்மையல்ல என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று எமிரேட்ஸ் செய்தித் தொடர்பாளர் கலீஜ் டைம்ஸுக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியிட்டு இருந்தது
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி