FACT CHECK ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்றாரா அமைச்சர் அன்பில் மகேஷ்... நடந்தது என்ன? உண்மை என்ன!! முழு விவரம்...
சமூக வலைதளங்களில் பலரும் ஆம்புலன்சுக்கு வழி விடாமல் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
தென்மேற்கு பருவ மழை காரணமாக, காவிரி, பவானி, வைகை, தாமிரபரணி போன்ற ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து டெல்டா பகுதிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஆய்வு மேற்கொள்ள வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அணைக்கரை கொள்ளிடம் ஆற்று பாலத்தில் தனது வாகனம் மற்றும் அரசு அதிகாரிகள் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட கார்களுடன் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பாலத்தின் மறுபக்கத்தில் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு வழியில்லாமல் நீண்ட நேரம் காத்திருந்தது. அமைச்சரின் வாகனங்கள் வந்த பிறகு ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல அனுமதிக்கப்பட்டது. என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
100 ஆண்டுகளை கடந்த மிகவும் பழமையான பாலம் அணைக்கரை பாலமாகும்
அதில் போக்குவரத்து என்பது ஒருவழி பாதைதான், அதாவது அந்த பாலத்தில் இருபுறமும் வாக்கி டாக்கியுடன் போலிசார் எப்பொழுதும் இருப்பார்கள்,
அந்த பாலத்தில் ஒருபகுதியில் இருந்து வண்டி வந்து விட்டால் எதிர்புறம் எந்த ஒரு பெரிய வாகனமும் செல்லமுடியாது அவ்வளவு குறுகிய பாலம் ஆகும் ஒரு வழியில் வாகனங்கள் வந்து சென்ற பிறகே எதிர் திசையில் இருந்து வாகனங்கள் செல்ல முடியும். இரண்டு பக்கங்களில் இருந்தும் வாகனங்கள் பாதி தூரத்தை கடந்துவிட்டால் வாகனங்கள் திரும்ப இயலாது.
பல காலமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த பாலத்தில் போக்குவரத்து தொடங்கிய பிறகு இந்த நடைமுறை தான் தற்போதும் பின்பற்றபடுகிறது
மேலும் கடந்த 2018 ம் ஆண்டு இந்த பாலத்தில் கனரக போக்குவரத்து வாகனங்கள் நிறுத்தப்பட்டது இரு சக்கர வாகனம், கார்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் சென்னை-கும்பகோணம் மார்க்கத்தில் பயணம் செல்வோர் அவதிப்பட்டனர்
அதனை தொடர்ந்து ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் மூலம் 2020 பிப்ரவரி மாதத்தில் பொதுப் பணித் துறையினர் அதிநவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். பாலத்தில் அதிகபட்சமாக 10 டன் அளவில் வாகனங்கள் இயக்கலாம் என தெரிவித்ததை தொடர்ந்து அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் கடந்த 07.07.2021 அன்றுதான் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது
மேலும் அந்த அணைக்கரை பாலத்திற்க்கு மாற்றாக புதிய பாலம் 100 கோடி மதிப்பீட்டில் அங்கு கட்டப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது
ஆக உண்மை நிலை இப்படி இருக்க அங்கு என்ன நடந்திருக்கும் என தற்போது உங்களுக்கே தெரிந்திருக்கும்
மேலும் இது குறித்து அமைச்சர் தரப்பில் ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னதாகவே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் வாகனங்கள் உள்ளே நுழைந்து விட்டதாலும் பின்னால் வாகனங்கள் அதிகமாக இருந்ததால் ரிவர்ஸ் எடுக்க முடியாது என்பதாலும் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றொரு ஓரத்தில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது அமைச்சர் விரைவாக கடந்து சென்ற பின்பு ஆம்புலன்ஸ் கடந்து சென்றதாக கூறப்படுகிறது.
https://twitter.com/ITWfactcheck/status/1556653411633754112
Tags: FACT CHECK மறுப்பு செய்தி