Breaking News

FACT CHECK இங்கிலாந்து ராணி எலிசபெத் இறுதிச் சடங்கில் ஒலித்த இந்து மந்திரங்கள் என பரவும் வீடியோ உண்மை என்ன????

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  மறைந்த ராணி  எலிசபெத்  இறுதிச் சடங்கில் ஒலித்த இந்து மந்திரங்கள் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?



ராணி  எலிசபெத்  இறுதிச் சடங்கில் ஒலித்த இந்து மந்திரங்கள் என்று பலரும் ஓர் வீடியோவை ஷேர் செய்து வருகின்றார்கள் ஆனால் உண்மை என்ன என்றால் 96 வயதான் இங்கிலாந்து இளவரசி இரண்டாம் எலிசபெத் கடந்த 08.09.2022 அன்று இறந்தார்கள் மேலும் அவருக்கான இறுதி சடங்கு 19.09.2022 அன்று நடைபெறும் என்று இங்கிலாந்து அரண்மனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது, உண்மை நிலை இவ்வாறு இருக்கின்றது,ஆனால் அதற்க்குள்ளாக சமூக வலைதளங்களில் ராணி  எலிசபெத்  இறுதிச் சடங்கில் ஒலித்த இந்து மந்திரங்கள் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது

மேலும் அந்த வீடியோவில் காமன்வெல்த் 2010 என உள்ளது என்பதை அறிந்து நாம் தேடியதின் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ க்கிங்ஹாம் அரண்மனையின் முன்பு கடந்த 29.10.2009அன்று 2010 ம் ஆண்டு டெல்லியில் நடக்க இருக்கும் காமன்வெல்த்  போட்டிக்காக குயின்ஸ் பேட்டன் பேரணி 2010 நிகழ்ச்சியின் போது செயின்ட் ஜேம்ஸ் பள்ளி குழந்தைகள் சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்கள் பாடிய போது எடுக்கப்பட்ட வீடியோவை 25.05.2019 அன்று WildFilmsIndia என்ற யூடியூப் சேனலில் பதிவிடிட்டு இருந்தார்கள் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 


முடிவு:-



எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=BoPB0HmNw50


Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback