FACT CHECK உங்க வதந்திக்கு அளவே இல்லையா!!! கலிமா ஷேர் செய்தால் நல்லதா!!! மார்க்கத்தின் பெயரால் இது போல் செய்யாதீர்கள்....முழு விவரம்
அட்மின் மீடியா
0
நீங்கள் எதையாவது அடைவதற்கு, வாழ்வில் போராடுவதை அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கிறான். அல்லாஹ் அதன் முடிவைச் சொல்கிறான். அல்லாஹ்விடமிருந்து ஒரு ஆசீர்வாதம் உங்கள் வழியில் வருகிறது. நீங்கள் அல்லாஹ்வை நம்பினால் இந்த செய்தியை மற்றவர்களுக்கும் அனுப்புங்கள் & தயவுசெய்து இதைப் புறக்கணிக்காதீர்கள், நீங்கள் சோதிக்கப் படுகிறீர்கள், அல்லாஹ் இன்று இரவு உங்களுக்கு ஆதரவாக இரண்டு(பெரிய) விஷயங்களை சரிசெய்யப் போகிறான். நீங்கள் அல்லாஹ்வை நம்பி இதை உடனடியாக உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு #Forward# பண்ணுங்கள். நாளை உங்கள் வாழ்க்கையின் சிறந்த நாளாக இருக்கும் ... இந்த தொடர் சங்கிலியை உடைக்க வேண்டாம் 10 நிமிடங்களில் 14 நண்பர்களுக்கு இதை அனுப்புங்கள்.
மிகவும் நோய்வாய்ப்பட்ட ஒரு பெண்ணுக்கு; முஹம்மது ரசூல் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது திருக்கரங்களால் குடிக்க தண்ணீர் கொடுத்த மாதிரி அப்பெண் கனவொன்று கண்டார். அவள் காலையில் எழுந்தபோது அவள் நோயிலிருந்து நன்றாக நலம் பெற்றாள், முற்றிலும் பொருத்தமாக இருந்தாள், நன்றாக இருந்தாள். "முஹம்மது அல்லாஹ்வின் உண்மையான தூதர்" என்று எழுதப்பட்டிருந்த ஒரு துண்டு காகிதத்தை அவள் மேசையின் பக்கத்தில் பார்த்தாள். எனவே தனக்கு என்ன நேர்ந்தது என்று மக்களிடம் சொன்னாள். அந்த பெண்ணின் இவ்விஷயத்தைக் கேட்ட ஒரு அதிகாரி, அதை 13 பேருக்கு உரை மூலம் அனுப்பினார், அவர் உடனடியாக வேலையில் பதவி உயர்வு பெற்றார். இவ்வுரையைப் பெற்ற மற்றொரு பையன் செய்தியை உடனடியாக நீக்கிவிட்டார், தொடர்ந்து அவர் 13 நாட்களுக்கு பெரும் இழப்புகளைச் சந்தித்தார். தயைகூர்ந்து இந்த செய்தியை 13 பேருக்கு அனுப்பி உங்களுக்கு என்ன நல்லது நடக்கிறது என்று பாருங்கள். தயவுசெய்து, இச்செய்தியை புறக்கணிக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையில் அல்லாஹ் எவ்வாறு அதிசயங்களைச் செய்கிறான் என்று பாருங்கள், நீங்கள் அல்லாஹ்வை நம்புவதால்...
- لا إله إلا محمد رسول الله -
صَلِّ صَلاَةً
وَنَفَسٍ بِعَدَدِ كُلِّ مَعْلُومٍ.
நீங்கள் 16 பேருக்கு மேற்படி இந்தக் கலிமாவை அனுப்பினால்; (எனக்கும் கூட அனுப்பலாம்) 12மணி நேரத்திற்குள் உங்களுக்கு மிக நன்மை தரும் ஒரு நல்ல செய்தியை தவறாது கேட்பீர்கள்; இன்ஷாஅல்லாஹ்... 100% நிச்சயமான உண்மையிது.
இதுபோன்ற ஒரு செய்தியினை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றார்கள் இந்த செய்தி உண்மையா என்று அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தியை நாம் படித்தால் அது ஒரு முஸ்லிமால் உருவாக்கப்படவில்லை என்பது நமக்கு நன்றாக தெரியும் ஆனால் பல இஸ்லாமிய பெயர் தாங்கிகள் இந்த விடயத்தை கூட ஆராயாமல் இது போன்ற இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளை ஷேர் செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று ஷேர் செய்கிறார்கள்
இஸ்லாமிய மார்க்கம் கற்றுத் தராத இது போன்ற பொய்யான கட்டுக்கதைகளை நம்பி யாரும் இது போன்ற செய்திகளை பிறரிடம் பரப்பாதீர்.
இது போல் செய்திகள் அனுப்பி மக்களை முட்டாள்களாக ஆக்காதீர்கள் இது போன்ற இந்த மூடத்தனமான செய்திக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை ..
அல்லாஹ்வை நம்பாமல் யாரை நம்ப போகிறீர்கள்
அல்லாஹ் கொடுத்த அறிவை பயன்படுத்தாமல் ஒரு சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளால் இந்த செய்தி ஷேர் செய்யபடுகின்றது
ஒரு செய்தியை பிறருக்கு தெரியப்படுத்துவதால் நல்லது நடக்கும் என புனித அல் குரான் சொல்லாத ஒன்றை நீ கூறியுள்ளாய்
ஹதீஸில் இல்லாத ஒன்றை நீ கூறி உள்ளாய்
முகமது நபி ஸல். சொல்லாத செய்யாத ஒன்றை நீ செய்துள்ளாய்
இந்த செய்தி அனுப்பினால் நல்லது நடக்கும் என்று அல்லாஹ்வின் அந்தஸ்தை நீ எடுத்து கொள்கின்றாய் பிரவுனை விட கொடியவன் நீ
நான் இதனை 10 பேருக்குக்கு அனுப்பினால் தான் இதனை அல்லாஹ் செய்வானா
தொழுகை வேண்டாமா
நல் அமல்கள் வேண்டாமா சொல்லுங்கள்
இன்னும் 1000 நபிமார்கள் வந்தாலும் நீங்க திருந்த மாட்டிங்களா
சிந்திக்கும் ஆற்றல் உங்களுக்கு இல்லயா உங்களுக்கு
இது போல் செய்திகள் அனுப்பி நீங்களும் வழி கெட்டு மற்றவர்களையும் ஏன் வழி கெடுக்கிறீர்கள்
இது போல் செய்திகள் அனுப்பி மக்களை முட்டாள்களாக ஆக்காதீர்கள் மார்க்கத்தில் புதிதாக உருவாக்காதீர்கள் அது வழிகேடு
உங்கள் குருப்பில் இந்த செய்தி வந்தால் அந்த செய்தி பொய் என்று கூறுங்கள் இஸ்லாமிய பெயர் தாங்கிகளே இதுபோன்ற பொய்யான செய்தியை பரப்பி இஸ்லாத்திற்க்கு கெட்டபெயர் வாங்கிதராதீர்கள்
இது போல் ஏராளமான பொய் செய்திகள் நாளுக்குநாள் வந்து கொண்டுதான் இருக்கின்றன இஸ்லாத்தின் பெயரால் கட்டுகதைகளையும் பொய் தகவல்களையும் ஷேர் செய்பவர்களே சிந்திக்கும் ஆற்றல் இல்லையா
மாற்றார்கள் இது போல் உங்கள் கட்டுகதை செய்திகளை பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று சிந்திக்கமாட்டீர்களா
நாம் அனைவரும் பொறுப்புதாரிகள் என்ற குரான் வசனம் நினைவில்லையா?
6 வது அறிவை இந்த மனிதசமுதாயத்திற்க்கு இறைவன் ஏன் வழங்கினான் இது போல் கட்டுகதைகளை பரப்பவா அல்லது சிந்திக்கவா
உங்கள் கட்டுகதைகளால் நீங்கள் அல்லாஹ்வின் வேதத்தின் மீது நேரடியாக போர் செய்கின்றீர்கள் என்று தெரியவில்லையா
பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் தோன்றி சொல்வது மார்க்கம் ஆகாது.இதை நபிகளாரே அறிவித்து விட்டார்கள்.
மார்க்கம் முழுமை அடைந்துவிட்டது..இது போன்ற அடிப்படை ஆதாரமில்லா எந்த செய்தியையும் விவாதத்திற்கு கூட எடுத்துக் கொள்ள வேண்டாம்...
அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள் கேள்வி பட்டதையெல்லாம் அதனை ஆராயாமல் பரப்புபவன் பொய்யன் என்பது நபிமொழி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என் மீது வேண்டுமென்றே பொய் சொல்கிறவர் தம் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக்கொள்ளட்டும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஷஹீஹ் புகாரி 6197
நமது அட்மின் மீடியாவின் சார்பாக பலமுறை நாம் போட்ட விடையம் என்னவென்றால் உங்களுக்கு ஒரு செய்தி கிடைத்தால் அதை நீங்கள் ஆராயுங்கள் அதைப்பற்றி உங்களுக்கு ஏதும் தெரியவில்லை என்றால் அதை பற்றி தெரிந்த நபர்களிடம் விசாரியுங்கள் அப்பொழுது அந்த செய்தியை ஷேர் செய்யுங்கள் இல்லையெனில் கண்டுக்காமல் விட்டு விடுங்கள் என்று கூறியிருக்கிறோம்
ஆனால் பலர் ஆர்வக்கோளாறாக பார்க்கும் பலர் பல விஷயங்களை அப்படியே ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள் ஆகையால் இது போன்ற விடயங்களை தவித்தால் நன்றாக இருக்கும் இது போன்ற செய்திகளை பிறரிடம் பரப்புவதற்கு முன் அதன் உண்மை தன்மை அறிந்து பகிரவும். இல்லையேல் விட்டுவிடுங்கள். பாவத்தில் சிக்காமலிருக்கலாம்.