Breaking News

பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் செல்போன் பெற விண்ணப்பிக்கலாம்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான கைபேசி பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என  மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,அவர்கள் அறிவித்துள்ளார்

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மூலம் 2022-2023-ம் நிதியாண்டிற்கு கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுயதொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கைபேசி வழங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

18 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 60 வயதிற்குட்பட்ட கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கைபேசி பெற தகுதியுடையவர்கள் ஆவர்.

கல்லூரி பயிலும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் மற்றும் சுய தொழில் புரியும் பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் மட்டும் 

1) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் UDID CARD

 2) குடும்ப அட்டை 

3) ஆதார் அட்டை 

4) பணிச் சான்று (கல்லூரி பயில்பவராயின் படிப்புச் சான்று, வேலையில்லா பட்டதாரி இளைஞர் எனில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை, சுய தொழில் புரிபவராயின் சுய தொழில் புரிவதற்கான சான்று) 

5) மார்பளவு புகைப்படம்-2 

ஆகியவைகளுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர். என்ற முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பித்திட தெரிவிக்கப்படுகிறது.

எனவே, தகுதியுடைய பார்வையற்ற மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கைபேசி பெறுவதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback