தீபாவளி பரிசு என வரும் மெசேஜ் வந்தால் உஷாராக இருங்க மத்திய அரசு எச்சரிக்கை diwali message scam diwali free gift offer
தீபாவளி பரிசு என உங்கள் போனுக்கு மெசேஜ் வந்தால் உஷாராக இருக்க வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை
தீபாவளி பரிசு என உங்கள் போனுக்கு மெசேஜ் வந்தால் உஷாராக இருக்க வேண்டும் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹேக்கர்கள் நமது ஸ்மார்ட்போன் மற்றும் கம்யூட்டர்களை ஹேக் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.ஸ்மார்ட்போன்களையும், கம்யூட்டர்களையும் முடக்கி அவர்களின் சாதனங்களை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இதன்மூலம் கடவுச்சொற்களைத் திருடி வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை நூதன முறையில் திருடும் கும்பல்கள் உள்ளன.
தீபாவளி பரிசு என்ற பெயரில் அப்பாவி பயனர்களை குறிவைத்து இந்த மோசடி நடத்துப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
தீபாவளி பரிசுகள் பெற இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள் என்று உங்களுக்கு மெசேஜ் வந்தால் அதை கிளிக் செய்ய வேண்டாம் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் (MEITY) கீழ் இயங்கும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதில், "இந்த மெசேஜ் வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற எந்தவொரு சமூக வலைதளங்களிலும் உங்களுக்கு மோசடி கும்பல் அனுப்பி வைக்கும். சில முன்னணி நிறுவனங்களின் பெயர்களை தாங்கியும் இதுபோன்ற மோசடி லிங்க்குகள் வரக்கூடும் என்பதால் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தனிநபர் தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொல்கள், ஒரு முறை கடவுச்சொல் போன்றவைகளை கேட்டால் கட்டாயம் பகிர வேண்டாம்" என்று தெரிவித்துள்ளது.
சமூக வலைதளங்களில் நீங்கள் பிரபல நிறுவனம் பெயரில் தீபாவளி வாந்த்து மற்றும் ஆபர், சலுகை ரீசார்ஜ் பரிசுகளை பெற கிளிக் செய்யும்படி வலியுறுத்தப்படுகின்றனர்.
நீங்கள் லிங்க்கை கிளிக் செய்வதன் மூலம் தொடர்ந்து பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படுகிறது, அனைத்து விவரங்களும் நிரப்பப்பட்ட உடன் பரிசுகளை பெற இதை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தினருடன் பகிரும் படி கேட்கப்படுகிறார்கள்.
இந்த நடைமுறையின் போது உங்கள் தனிப்பட்ட தரவு உள்ளிட்ட அனைத்தையும் ஹேக்கர்கள் பெற்றுவிடுகிறார்கள்.
Beware of This FREE Diwali gifts scam
diwali free gift offer
தேவையில்லாமல் அவர்கள் ஏன் உங்களுக்கு பரிசளிக்க வேண்டும். நியாயமற்ற முறையில் அதீத விலைக்குறைப்பு வழங்க என்ன காரணம் என்று நீங்கள் சிந்தித்தது உண்டா
மேலும் இது மெசேஜில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் மோசடி செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு ஆலோசனை வழங்கியுள்ளது.
அதுபோல் வரும் இணைப்பை கிளிக் செய்தால் அதில் உங்களது தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி விவரங்கள் கேட்கப்பட்டால் அதை யாரும் தர வேண்டாம் என்றும் இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு அறிவுறுத்தியுள்ளது.
Tags: FACT CHECK முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி