Breaking News

FACT CHECK சீனாவில் பரதநாட்டியம் ஆடிய பெண் ரோபோ என பரவும் வீடியோ உண்மை என்ன!!! Amazing Female Dancing Robot in Shanghai

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்   நடனத்தை கவனமாகப் பாருங்கள், சீனாவில் ஷாங்காயில் உள்ள டிஸ்னிலேண்டில் நிகழ்த்தப்பட்ட பாரம்பரிய நடனம். இருவருமே நடன கலைஞர்கள் அல்ல. இவை இரண்டு சீனாவில் தயாரிக்கப்பட்ட ரோபோக்கள். நடனம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே. இருப்பினும் இந்த நடனத்தை பார்க்க டிக்கெட் வாங்க 4 மணி நேரம் ஆகும். இந்த நடனத்தைப் பார்ப்பதற்கான டிக்கெட் விலை 499 யுவான், இது $ 75 க்கு சமம். இந்திய மதிப்பில் 5,600 / – இலங்கை மதிப்பில் தோராயமாக 🌹🌹🌹🌹* அவர்களின் முகபாவங்கள் ஜப்பானியர்களின் முகபாவனைகளைப் போலவே இருக்கும். இந்த இரண்டு ரோபோக்களும் உண்மையான மனிதர்களைப் போல் இருக்க மிகவும் கடினமாக உழைத்தனர்” என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ளவர்கள் ரோபோக்கள் இல்லை மனிதர்கள்தான் அவர்கள் அமெரிக்காவை சேர்ந்த Sophia Salingaros, மற்றும் Isha Parupudi என்பவர்கள் எனவும் இருவரும் முறைப்படி பரதம் கற்று கொண்டவர்கள் எனவும் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ 11.08.2017 அன்று அவர்கள் நடனமாடியது ஆகும் என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=TdYWOr12ONU

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback