FACT CHECK வயதானவர்களுக்கு இலவச ஹஜ் என பரவும் செய்தி உண்மையா??? muhammad national group jeddah free hajj
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் சிலர் 60 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு முகம்மது நேஷனல் கம்பெனி இலவசமாக ஹஜ் அழைத்து செல்கின்றார்கள் என்று ஓர் செய்தியினை ஷேர் செய்கின்றர்கள்
ஹஜ் என்றால் என்ன:-ஹஜ் என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உடல் நலமும் பணவசதியும் உள்ள ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும். இந்த ஹஜ் பயனம் துல்ஹஜ் மாதத்தில் செல்வார்கள்
இலவசஹஜ் எனபரவும் செய்தி:-
பலரும் ஷேர் செய்யும் அந்த இலவச ஹஜ் என பரவும் புகைப்படத்தில் உள்ள் மொபைல் நம்பர் ஓர்க் ஆகவில்லை
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி 2016 ம் ஆண்டு முதல் இண்டர்நெட்டில் வலம் வரும் ஓர் பொய்யான செய்தி ஆகும்.
தற்போது வாட்ஸப், பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டா என பல சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது
நாமும் கடந்த 5 வருடங்களாக அந்த செய்தி பொய் செய்தி என்று சொல்லி வருகின்றோம் ஆனால் அதையும் தாண்டி அந்த பொய்யான செய்தி வலம் வந்துகொண்டுதான் உள்ளது
எனக்கு ஒருவர் அனுப்பினார் அதான் நானும் அனுப்பினேன் என்று அடுத்தவர் மீது பழி போடாதீர்கள். தாம் கேள்வி பட்டதை எல்லாம் பரப்புபவன் பொய்யன் என்று நபி ஸல் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
Tags: FACT CHECK மறுப்பு செய்தி