Breaking News

FACT CHECK, இரத்த புற்றுநோய்க்கு அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக மருந்து தரப்படுகின்றதா உண்மை என்ன? imitinef mercilet medicine free in adyar chennai

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இரத்த புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த Imitinef Mercilet எனும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அம்மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக தரப்படுவதாகவும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?



உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பல ஆண்டுகளாக இணையத்தில் வலம் வரும் முற்றிலும் பொய்யான செய்தி ஆகும்

இந்த செய்தி பொய்யானது என கடந்த 2017 ம் ஆண்டு அட்மின் மீடியா செய்தி வெளியிட்டது, அந்த செய்தி மீண்டும் தற்போது  வைரலாக பரவி வருகின்றது

இந்த செய்தி குறித்து அடையாறு மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:-

Imitinef Mercilet எனும் மருந்து கிடைப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. இந்த மருந்து அனைத்து வகை இரத்த புற்றுநோய்களையும் குணப்படுத்துவதாகவும், இம்மருந்து அடையார் புற்றுநோய் மையத்தில் இலவசமாக கிடைப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலானது தவறானது என்பதை நாங்கள் தெளிவுப்படுத்த விரும்புகின்றோம். 

உண்மையில் ‘chronic myeloid leukemia’ எனும் ஒரு வகையான இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ‘imatinib mesylate’ எனும் மருந்து தரப்படுகின்றது இந்த மருந்தானது இந்தியாவிலுள்ள அனைத்து அனைத்து புற்றுநோய் மருத்துவமனைகளிலும் பரிந்துரைக்கப்படுகின்றது.

ஆகவே இந்த தவறான தகவலை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம் என அதில் உள்ளது

அதேபோல் உலக சுகாதார மையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் Imitinef Mercilet  எனும் பெயரில் மருந்து இல்லை என்பதையும், ஆனால் imatinib mesylate எனும் பெயரில் மருந்து உள்ளது என்று அதில் உள்ளது.

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் 

பலரும் ஷேர் செய்யும் Imitinef Mercilet  என்ற பெயரில் மருந்தே இல்லை

மேலும் chronic myeloid leukemia’ எனும் ஒரு வகையான இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ‘imatinib mesylate’ எனும் மருந்தையே Imitinef Mercilet என தவறாக ஷேர் செய்து வருகின்றார்கள்


முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்


https://cancerinstitutewia.in/CIWIA/download/SPURIOUS%20E-MAIL%20ABOUT%20FREE%20MEDICINE-IMATINIB.pdf


https://apps.who.int/iris/bitstream/handle/10665/72141/17_2_2003.pdf?sequence=1&isAllowed=y


https://www.adminmedia.in/2017/09/blog-post_21.html

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback