Breaking News

FACT CHECK இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு என பரவும் வீடியோ !!! உண்மை என்ன!! indonesia under sea volcano fake news

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் நிகழ்ந்த எரிமலை வெடிப்பு மொபைல் இருட்டியபின்பு 15 விநாடிகள் காத்திருக்கவும் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ உண்மையானது அல்ல, அது 2008 ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஒரு கிராபிக்ஸ் வீடியோ என்று அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-

எனக்கு வந்தது நான் அதனை மற்றவர்களுக்கு அனுப்பிவிட்டேன் என் கடமை முடிந்துவிட்டது என நினைத்து உண்மையா ? பொய்யா? என ஆராயாமல் அப்படியே பலருக்கும் ஷேர் செய்யும் பழக்கம் தற்போது பலரிடம் அதிகரித்துவிட்டது

அந்த வரிசையில் இந்த வீடியோவும் இணைந்துள்ளது

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவை ஒருமுறைக்கு பலமுறை நன்கு பார்த்தால் புரியும் அது கிராபிக்ஸ் என்று ஆனாலும் அதனை பலர் ஷேர் செய்து வருகின்றார்கள்

அந்த வீடியோவில் உள்ள சந்தேகங்கள்

எரிமலை வெடித்தால் கடலில் எந்த சலனமும் இல்லாமல் இருக்குமா? கடல் நீர் அப்படியே உள்ளது

அந்த வீடியோவை நன்றாக பாருங்கள் அதில் உள்ள வீடு வெளியில் உள்ள கார்கள், அந்த சாலைகள் என அனைத்தையும் பாருங்கள் அது கிராபிக்ஸ் என்று புரியும்

உண்மையில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு நிகழ்ந்தால் எப்படியிருக்கும் என அனிமேஷன் முறையில் 2008 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட செயற்கையான வீடியோ காட்சிதான் அது

ஆக்லாந்தில் உள்ள கிராஃபிக் டிசைன் ஏஜென்சியான Brandspank , வீடியோ பகிர்வு தளமான Vimeo இல் 2011 ம் ஆண்டு 3D தொழில்நுட்பங்கள் உதவியுடன் தயாரிக்கபட்ட வீடியோ என பதிவிட்டுள்ளது

மேலும் ஆக்லாந்து போர் நினைவு அருங்காட்சியகம் 2019 இல் தனது அதிகாரபூர்வ  யூடியூப்பில் அதே வீடியோவை பதிவிட்டு "இது எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் கல்வி உருவகப்படுத்துதல்" என்ற தலைப்புடன். பதிவிட்டுள்ளது

முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியா ஆதாரம்:-

https://www.youtube.com/watch?v=7RfPsoiyJfs

2008 ம் ஆண்டு யூடியூப்பில் பதிவேற்றப்பட்ட வீடியோ

https://www.youtube.com/watch?v=LKuULHIg6Uo

2011ம் ஆண்டு அதிகாரபூர்வமாக அந்த வீடியோ தயாரித்த நிறுவனம் விம்கோவில் ஹெச்டி தரத்தில் பதிவேற்றியுள்ளது

https://vimeo.com/29927106

Visuals Of Underwater Volcanic Eruption In Sumatra

Simulation Video of Underwater Volcanic

A simulation video is being falsely shown as volcanic eruption

Tags: FACT CHECK மறுப்பு செய்தி வைரல் வீடியோ

Give Us Your Feedback