FACT CHECK கேரளாவில் மதம் மாறிய ஷாலினி உன்னி கிருஷ்ணன் பகிர்ந்தது! என பரவும் வீடியோ உண்மை என்ன kerala story teaser

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  கேரளாவில் மதம் மாறிய ஷாலினி உன்னி கிருஷ்ணன் பகிர்ந்தது! 32000 இளம் பெண்கள் இஸ்லாமுக்கு லவ் ஜிகாத்தால் மதம் மாறி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு உடற் பசிக்கு இரையான பரிதாபம்! மறுத்தவர்கள் மண்ணில் புதைக்கப்பட்ட பரிதாபம்’  என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தியின் உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, 

மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது 

அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ  kerala story என்ற திரைப்படத்தின் teaser என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 


முழு விவரம்:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் புர்கா அணிந்த ஓர் பெண்மணி பேசுகின்றார் அவர் எனது பெயர் ஷாலினி உன்னிகிருஷ்ணன். நான் நர்ஸாக நாட்டுமக்களுக்கு சேவை செய்ய நினைத்தேன். ஆனால் நான் இப்போது பாத்திமா என்ற பெயருடன் ISIS தீவிரவாதியாக ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ளேன். 

என்னைப்போல் 32000 பெண்கள் மதம் மாற்றப்பட்டு சிரியா மற்றும் ஏமன் பாலைவனங்களில் புதைக்கப்பட்டுள்ளனர். ஒரு சாதாரண பெண்ணை பயங்கர தீவிரவாதியாக மாற்றும் கொடூர விளையாட்டு கேரளாவில் நடந்து வருகின்றது. அதுவும் வெளிப்படையாக நடந்து வருகின்றது.. இதை யாராவது தடுப்பார்களா? இது என்னுடைய கதை. இது 32000 பெண்களின் கதை. இது கேரளாவின் கதை’என்று அந்த வீடியோவில் அந்த பெண்மணி பேசி இருந்தார்.

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் பேசும் சம்பவம் ஓர் திரைபட டிரைலர் ஆகும், தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படத்தின் டிரைலர் தான் அது

தி கேரளா ஸ்டோரி எனும் திரைப்படத்தை சன்ஷைன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது 

பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் உள்ள பெண் அடா ஷர்மா என்ற நடிகை ஆவார் அவர் அந்த படத்தில் நாயகியாக நடித்துள்ளார். 


முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.youtube.com/watch?v=udoCRDjqxv8


 kerala story teaser

adah sharma

shalini unnikrishnan isis

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback