FACT CHECK கேரளாவில் கடல் அலை அப்படியே எந்த அசைவுமின்றி இருக்கும் வீடியோ !! உண்மை என்ன? no waves in beach kerala
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் கேரளாவில் கடல் அலை அப்படியே எந்த அசைவுமின்றி படைத்தவன் கட்டுப்பாட்டில் நிற்பதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். அல்லாஹ்வே அறிந்தவன். மிகவும் அற்புதமான காட்சி, வியக்கத்தக்க காட்சி. சுஹானல்லாஹ்! என்று ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 29.10.2022 அன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, கோழிக்கோடு நைனாம் வலப்பு பகுதியில் உள்ள சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்ல கூடிய கோத்தி கடற்கரையில் திடிரென 50 மீட்டர் கடல் உள் வாங்கியது அப்போது எடுக்கப்பட்ட வீடியோ என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
பொதுவாக கடல் நீர் உள் வாங்கும் மீண்டும் வழக்கம் போல் பழமையான நிலைக்கு வந்துவிடும் , இதுபோல் அடிக்கடி , கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருச்செந்தூர் பகுதியில் நிகழும் , அந்த சமயத்தில் கடல் அலை பெரிதாக இல்லாமல் இருக்கும்
ஆனால் நீர் அசைவின்றி இருக்காது அலை மட்டும் இருக்காது, குறிப்பாக கூறவேண்டும் என்றால் ஏரி போல் இருக்கும்
அதுபோல் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே, கோழிக்கோடு நைனாம் வலப்பு பகுதியில் உள்ள சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்ல கூடிய கோத்தி கடற்கரையில் திடிரென 50 மீட்டர் கடல் உள் வாங்கியது, இதனால் அந்த பகுதியில் அச்சம் நிலவியது, சுனாமி வரப்போகுது என வதந்தி பரவியது
அதன்பின்பு மாவட்ட ஆட்சியர் வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டார் பின்பு மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை தற்போதைக்கு இல்லை. அதனால் கடல் நீர் உள்வாங்கியது குறித்து கவலைப்படத் தேவையில்லை என கூறினார்கள்’யுள்ளது.
அதன்பின்பு கடல் நீர் உள் வாங்கி இருப்பதை காண, ஏரளமான மக்கள் கூட்டம் கூட்டமாகவர ஆரம்பித்தார்கள் இதனையடுத்து உள்வாங்கிய கடல் நீர் மறுநாள் இயல்பு நிலைக்கு வந்ததுள்ளது
இதனை பல மலையாள ஊடகங்கள் செய்தியாக வெளிட்டுள்ளது, வீடியோவைவும் பதிவிட்டுள்ளார்கள் உண்மை நிலை இப்படி இருக்க கடல் உள்வாங்கிய வீடியோவை எடுத்து கடல் அசைவின்றி இருக்கு என பொய்யாக வதந்தி பரப்பிவருகின்றார்கள்
கடல் நீர் உள் வாங்கியதால் அந்த இடம் லாங் ஷாட் வீடியோவில் அது கடல் போல் காட்சி அளித்தாலும் அது மணல் திட்டுக்கள் தான் , கீழ் உள்ள மலையாள ஊடகங்கள் எடுத்த வீடியோக்களை பாருங்கள் அதில் மக்கள மீன் பிடிப்பதையும் நீர் அதில் அசைவதையும் பார்க்கலாம்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=1QolPMAYZ7o
https://www.youtube.com/watch?v=vWIYRWYmoKo
https://www.youtube.com/watch?v=2i5y7HjWTnk
kozhikode beach news
Sea recedes about 50 metres in Kozhikode
no waves in beach
no waves in beach kerala
Sea returning to normalcy at Kothi beach
Tags: FACT CHECK மறுப்பு செய்தி