அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
இது போன்ற செய்தியினை ஆண்டுதோறும் பலர் பரப்பி வருகின்றார்கள், உணமி தெரியாமல் சில ஊடகங்களிலும் அந்த செய்திகள் வந்துள்ளது ஏன் நீங்களும் இதுவரை பல செய்திகள் அது போல் படித்து இருப்பீர்கள் ஆனால் இதுவரை அநடந்தது இல்லை
உலகம் இருளில் முழ்கும் என்று ஷேர் செய்தவர்கள் எல்லாம் எங்கு போனார்கள் என்று தெரியவில்லை
சூரிய புயல் என்றால் என்ன:-
சூரியப் புயல் என்பது சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் காற்று வெடித்து தீப்பிழம்பாக மாறி அதன் மண்டலம் தாண்டி பரவி, அதன் எல்லா கிரகங்களையும் பாதிக்கும் சூரிய சக்தி அலைகள் ஆகும்.
இந்த சூரியக் காற்று பூமியின் காந்த தடுப்பு வளையத்தையும் பாதிக்கும். அதனால் பூமியில் மின்சார தடைகள், இருட்டடிப்புகள், ஒலி, ஒளிபரப்பு அலைகள் அனைத்தையும் பாதிக்கும். அது விண்வெளி வீரர்களையும், பூமியில் உள்ள மனிதர்கள், மிருகங்கள், செடி கொடிகள் அனைத்தையும் பாதிக்கும்.
உலகம் இருளில் மூழ்குமா?
சூரிய புயல் என்பது சூரியனில் அவ்வப்போது ஏற்படும் ஒரு நிகழ்வு.
இதனால் பூமிக்கு ஏதேனும் அபாயம் ஏற்படுமா என்றால், அதற்கு சாத்தியம் குறைவுதான் ஏனெனில் அதன் வெப்ப துகள்கள் வழி மண்டலங்களை தாண்டி பூமிக்கு வருமுன்னே கரைந்து விடும். அதனால் இது குறித்து பயப்பட தேவையில்லை.
அதாவது பூமிக்கு மேல் காற்று மண்டலம் உள்பட பல மண்டலங்கள் உள்ளன. அந்த மண்டலங்களைத் தாண்டித்தான் இந்த சூரியப் புயல் பூமிக்கு வர வேண்டும். அத்தனை மண்டலங்களும் இந்த சூரியப் புயல் வேகத்தின் தாக்கத்தைக் குறைத்து விடும். மேலும் பூமியைச் சுற்றி காந்த வளையம் உள்ளது.இந்தச் சக்தி வெப்பத்தை பூமிக்கு வரவிடாமல் தடுத்து விடும். எனவே பூமிக்கும் மக்களுக்கும் இந்த சூரிய புயலால் எந்த வித ஆபத்தும்
சூரிய புயலால் அதிகம் அடித்தால் உலகில் மின்சாரம் தடைபடும் என்பதும், அதனால் உலகில் இருள் ஏற்படும் என்பதும் கணிப்பே அன்றி வேறில்லை. எனவே இது குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
சில ஊடகங்கள் மற்றும் வாட்ஸப் பேஸ்புக் போன்ற சமூக தளங்களிலும் ஆய்வில்லாமல் இது போன்ற தகவலை பரப்பி பீதியை கிளப்பி வந்தனர்.
உண்மை என்ன:-
ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் பரவும் பொய்யான செய்தி இது யாரும் நம்பவேண்டாம்
அந்த செய்தி கடந்த 2014, மற்றும் 2015, 2016, 2017, 2019,2020 ம் ஆண்டுகளில் பரவலாக பரவியது அப்போதும் அட்மின் மீடியா இந்த செய்தி பொய் என மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது.நாசாவும் அந்த செய்தியினை மறுத்துள்ளது
எனவே மக்களே தெளிவான முறையில் சிந்தித்து உண்மையை உணருங்கள்.
ஒரு செய்தி கேள்விபட்டால் அதை ஆராயாமல் ஆர்வமாக ஷேர் செய்யும்
நண்பர்களே இனியாவது சிந்தியுங்கள்.
நாம் எதை ஷேர் செய்ய வேண்டும்
எதை ஷேர் செய்யகூடாது
எதை ஷேர் செய்தால் மக்கள் பயன் பெறுவார்கள்.
எதை ஷேர் செய்தால் மக்கள் பயப்படுவார்கள்
என ஆராய்ந்து உண்மை தன்மையை அறிந்து ஷேர் செய்யுங்கள்
இந்த வாட்ஸ்ஆப் நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
இனிவரும் காலங்களில் நன்மை ஏவி தீமை தடுக்க பயன் படுத்துவோம்.
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்:-