Breaking News

FACTCHECK லைலதுல் கத்ர் இரவு நாஸா ஆராய்சி என பரவும் செய்தி உண்மை என்ன Laylatul Qadr fake news

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  லைலதுல் கத்ர் இரவு நாஸா ஆராய்ச்சியில் நிரூபணம் ! 7:30 PM ஆன்மீகம் நாஸா வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்த விஞ்ஞானி ஒருவர் லைலதுர் கத்ர் இரவு பற்றி விஞ்ஞான பூர்வமாக அறிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட சம்பவம் பதிவாகியுள்ளது. நாஸா ஆராய்ச்சி மையத்தகவல் படி ஒரு நாளைக்கு பூமியை நோக்கி 10000 தொடக்கம் 20000 வரை விண்கற்கள் வீசப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் 365 நாட்களும் இந்த நிகழ்வு இடம்பெற்று வந்தபோதும் ஒரு நாளில் மாத்திரம் இந்த நிகழ்வு இடம்பெறவில்லை என நாஸா விண்வெளி ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. இது தொடர்பில் கடந்த 10 வருடங்களாக அறிந்து வைத்திருந்த ரகசியத்தை நாஸா வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்த விஞ்ஞானி காரன்ஸ் என்பவர் வெளியிட்டுள்ளதோடு அவர் புனித இஸ்லாம் மதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் சவுதி அரேபியாவின் அல் குர் ஆண் ஆராய்ச்சி மையத்திடம் கருத்து வெளியிட்டுள்ள விஞ்ஞானி காரன்ஸ் .. 'நான் கடந்த பத்து வருடங்களாக பூமியை நோக்கி வீசப்படும் விண்கற்கள் தொடர்பில் ஆராய்ச்சி செய்து வருகிறேன் ஒரு நாளைக்கு சுமார் 10000 தொடக்கம் 20000 விண்கற்கள் பூமியை நோக்கி எறியப்படுகிறது. வருடத்தில் ஒரு நாளைத்தவிர மற்றைய தினங்களில் இந்த நிகழ்வு இடம்பெறுகிறது. இது தொடர்பில் நான் ஆராய்ந்த போது லைலதுல் கத்ர் இரவு பற்றி அறிந்துகொண்டேன். அந்த இரவில் வான்வெளி மயான அமைதியாக இருக்கும் என்ற விடயத்தையும் றமழான் மாதம் கடைசி 10 இல் எதோ ஒரு தினத்தில் இந்த தினம் இடம்பெறுகிறது என நான் அறிந்துகொண்டேன். பூமியை நோக்கி எரிகற்கள் வீசப்படாமல் வான்வெளி மயான அமைதியாக இருப்பது ரமலான் கடைசி பத்தில் ஏதோ ஒரு தினத்தில் இடம்பெறுகிறது என்ற உண்மையை நான் கடந்த 10 வருடங்களாக அவதானித்து வருகிறேன்' என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயத்தை அறிவித்துள்ள அவர் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார் என அல் குர்ஆன் ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. #இஸ்லாம் பற்றி பேசுவதும்.. இஸ்ஸாத்தை எத்தி வைப்பதும் ஒவ்வொரு இஸ்லாமியர்களின் #கடமையாகும்.. #அல்லாஹ் அக்பர் #புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே  என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 





அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


லைலத்துல் கத்ர் என்றால் என்ன:-

லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக புனித திருக்குர்ஆன் கூறுகிறது.

நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம்.(அல்குர்ஆன் : 97:1)


லைலத்துல் கத்ரை ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தில் தேட வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

நபி (ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். `ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்’ எனக் கூறுவார்கள். (ஸஹீஹுல் புகாரீ 2020)

ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள். (அறிவிப்பு: ஆயிஷா (ரலி), ஸஹீஹுல் புகாரீ 2017)


இப்படி புனிதமிக்க லைலத்துல் கத்ர் இரவு பற்றி பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி  குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு ஆராய்ந்தது, 

அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பொய்யானது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-


பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் 2 விவரங்கள் உள்ளன

1. ஒரு நாளைக்கு பூமியை நோக்கி 10000 தொடக்கம் 20000 வரை விண்கற்கள் வீசப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருடத்தில் 365 நாட்களும் இந்த நிகழ்வு இடம்பெற்று வந்தபோதும் லைலத்துல் இரவு நாளில் மாத்திரம் இந்த நிகழ்வு இடம்பெறவில்லை என நாஸா விண்வெளி ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது. 

2. இது சம்பந்தமாக  கடந்த 10 வருடங்களாக நாஸா வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்த விஞ்ஞானி காரன்ஸ் என்பவர் வெளியிட்டுள்ளதோடு அவர் புனித இஸ்லாம் மதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார்

அந்த 2 செய்திகளும் பொய்யானது ஆகும்  மேலும் பலரும் ஷேர் செய்யும் அந்த பொய்யான செய்தி இணையத்தில் கடந்த 2017 ம் ஆண்டு முதல் பரவி வருகின்றது.

மேலும் வங்காள தேசத்தை சேர்ந்த https://www.jachai.org/fact-checks/post-1890 என்ற இணையதளம் இந்த செய்தி குறித்து முழு விவரமாக பதிவிட்டுள்ளது. அதில்

இந்த செய்தியினை கடந்த 08.01.2017 அன்று ஹாஃபிஸ் முப்தி காசி முஹம்மது இப்ராஹிம் என்பவர் யுனிவர்சல் விஷன்  யூடியூப் நேர்காணலில் மேற்கண்ட செய்தியினை கூறியுள்ளார்

அதாவது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஆராய்ச்சியில் ஒவ்வொரு இரவும் வானத்தில் இருந்து 10-20 லட்சம் விண்கற்கள் விழுவதாகக் கண்டறிந்துள்ளனர், ஆனால் ஒரு குறிப்பிட்ட இரவில் விண்கல் மழை இல்லை, அதுதான் முஸ்லிம்களின் புனித இரவான லைலதுல் கத்ர். இந்த இரவில் பூமியின் வானம் முற்றிலும் தெளிவாக இருப்பதை விஞ்ஞானிகள் விண்வெளியில் இருந்து கண்டு பிடித்துள்ளார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தூயவழி .காம் என்ற பேஸ்புக்கில் J.யாஸீன் இம்தாதி 01-07-17 அன்று கட்டுரை எண் 1105 ல் தெளிவாகவும் விரிவாகவும் அந்த செய்தி பொய்யானது என பதிவிட்டுள்ளார்.

மேலும் காரன்ஸ் எனும் பெயரில் நாசாவில் பணியாற்றும் நபர் ஒருவர் உண்டா ? என கேள்வி எழுப்பி இருந்தார்.

அதன்பின்பு நாமும் அந்த செய்தி குறித்து இணையத்தில் தேடிய வரையில் 

விண்வெளியில் லைலத்துல் கத்ர் இரவில் விண்கல் விழவில்லை எனவும் இதனை நாஸா வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணி புரிந்த விஞ்ஞானி காரன்ஸ் என்பவர் வெளியிட்டுள்ளதோடு அவர் புனித இஸ்லாம் மதத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது பொய்யான செய்தியாகும்.அதுபோல் ஓர் செய்தி எங்கும் கிடைக்கவில்லை

மேலும் விக்கிபீடியாவில்  இஸ்லாத்திற்க்கு வந்தவர்கள் உள்ள பட்டியலில் https://en.wikipedia.org/wiki/List_of_converts_to_Islam அது போல் ஓர் விஞ்ஞானி பெயர் இல்லை

எனவே யாரும் பொய்யான செய்தியினை நாரும் நம்பாதீர்கள், யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள்


அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.jachai.org/fact-checks/post-1890

https://m.facebook.com/tuyavali/posts/1070724673060032/


Laylatul Qadr fake news

laylatul qadr fake news

laylatul qadr

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback