Breaking News

ஹெல்மெட் அணிவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் என பரவும் செய்தி உண்மை என்ன helmets don’t pay fines

அட்மின் மீடியா
0

 கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  FLASH NEWS தமிழக அரசு செய்தி :தலை கவசம் ( ஹெல்மெட் ) அணிவது , அவர்களின் தனிப்பட்ட விருப்பம் .உயிரின் மேல் விருப்பம் உள்ளவர்கள் அணிந்துகொள்ளட்டும் .ஹெல்மெட் அணியாதவர்களின் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என காவல் துறைக்கு முதல்வர் உத்தரவு....ஹெல்மெட்டுக்காக காவல்துறை அபராதம் கேட்டால். +91 83 44 606680 .இந்த  எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.அனைத்து குரூப்பிர்க்கும் பகிரவு என்று  ஒருசெய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி பற்றி நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு ஆராய்ந்தது, அந்த செய்தி கடந்த 2017 ம் ஆண்டு முதல் இணையத்தில் பரவி வரும் பொய்யான செய்தி என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது மேலும் 2017 ம் ஆண்டே அட்மின் மீடியா அந்த செய்தியினை மறுத்து செய்தி வெளியிட்டு இருந்தது

முழு விவரம்:-

அதில் உள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொண்டோம். பலமுறை முயற்சித்தும் அந்த எண் உபயோகத்தில் இல்லை என்ற தகவலே நமக்குக் கிடைத்தது.

மேலும் இது போல் ஓர் அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்கவில்லை


மேலும் இது போல் ஓர் உத்தரவை  நீதிமன்றமும் பிறப்பிக்கவில்லை


முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள், பொய்யான செய்தியினை ஷேர் செய்து மற்றவர்களை ஏமாற்றாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

2017 ம் ஆண்டு அட்மின் மீடியா மறுப்பு செய்தி

https://www.adminmedia.in/2017/04/blog-post_19.html

வாகன ஓட்டிகளே உஷார் போக்குவரத்து புதிய விதிகள் அபராதம் முழு விவரம் tamil nadu traffic rules and fines in tamil language

https://www.adminmedia.in/2022/10/tamil-nadu-traffic-rules-and-fines-in.html


#ஹெல்மெட்

#ஹெல்மெட் அணிவது  அவர்களின் தனிப்பட்ட விருப்பம்

#helmets don’t pay fines

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback