ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்ய சுப்ரீம்கோர்ட்டில் மனு!! jallikattu
தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் முக்கிய விளையாட்டுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு. அதிலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் விலங்குகளை துன்புறுத்துவதாக கூறி பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தில்கடந்த 2016 ம் ஆண்டு மனு தாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததால் தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டமாக வெடித்தது.பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டு விளையாட்டை மீண்டும் நடத்த அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது, அதற்க்கு அப்போதய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் அளித்து அது சட்டமாக மாரியது
அதனை தொடர்ந்து இது வரை ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டியை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரனைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ரது
TAGS:-
#bout jallikattu in tamil
#jallikattu in tamil
#jallikattu tamil
#tamil jallikattu
#ஏறுதழுவுதல் என்றால் என்ன
ஜல்லிக்கட்டு வரலாறு
#jallikattu quotes in tamil
#ஜல்லிக்கட்டு தமிழ்
#ஜல்லிக்கட்டு விளையாட்டு
#ஏறுதழுவுதல்
Tags: தமிழக செய்திகள்