Breaking News

கீழக்கரை திமுக கவுன்சிலர் கடத்த முயன்றது போதைப்பொருள் அல்ல !!அது விவசாய உரம் என கடலோர காவல்துறை விளக்கம் Keelakarai news

அட்மின் மீடியா
0

கீழக்கரை திமுக கவுன்சிலர் கடத்த முயன்றது கோகைன் போதைப்பொருள் அல்ல  அது விவசாய உரம் என கடலோர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே மண்டபம்-வேதளை சாலையில் நேற்று முன்தினம் 28ம் தேதி  இரவு கடற்படையைச் சேர்ந்த கடற்கரை போலீசார் வேதாளை கடற்கரை சாலையில்  வாகன சோதனை கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது அங்கு வேகமாக TN-57 AA 0077 என்ற பதிவு எண் கொண்ட பஜிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது,அந்த காரினுள் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 கேன்களில் வெள்ளை நிற மாவுப்பொருள் அடைக்கப்பட்டிருந்தது. அதை பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த காரில் வந்த ஜெயினுதீன் மற்றும் சர்ப்ராஸ் நாவஸ் சகோதரர்களை போலீசார் கைது செய்தனர்.



இதையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெயினுதீன் கீழக்கரை நகராட்சி திமுக முன்னாள் கவுன்சிலர் என்பதும் மற்றொறு நபரான சர்ப்ராஸ் நவாஸ் கீழக்கரை நகராட்சியின் 19 வது வார்டு திமுக கவுன்சிலர் என தெரியவந்தது. அதன் பின்பு இருவரையும் கைது செய்த போலீஸார் அந்த மாவை பறிமுதல் செய்தார்கள். இந்த மாவுபொருளை சோதனைக்கு அனுப்ப உள்ளதாகவும், உண்மை  என்ன என்று தெரிய வரும் என கூறியிருந்தனர். 

இதற்க்கிடையில் அந்த மர்ம பவுடர் கோகைன் போதைப்பொருள் என்றும் அதன் மதிப்பு 360 கோடி ரூபாய் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தது, அதற்க்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கண்டனத்தையும் தெரிவித்திருந்தார்கள், மேலும் எடப்பாடி பழனிச்சாமி  இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்

இந்நிலையில்  கீழக்கரை திமுக கவுன்சிலர் கடத்த முயன்றது கோகைன் போதைப்பொருள் அல்ல  அது விவசாய உரம் என கடலோர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 

கடந்த 28.11.2022 இரவு 08.00 மணியளவில் மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும காவலர்கள் மண்டபம் வேதாளை கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கிடமாக வந்த TN-57 AA 0077 என்ற பதிவு எண் கொண்ட பஜிரோ வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அவ்வாகனத்தில் கீழக்கரை சங்குளிகாரத்தெருவை சேர்ந்த (1) சர்பராஸ் நவாஸ் (42/2022) த/பெ. சம்சுதீன் மற்றும் (2) ஜெய்னுதீன் (45/2022) த/பெ. சம்சுதீன் ஆகியோர் 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 30 தண்ணீர் கேன்களில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற பவுடர் (394 கிலோ) வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்படி நபர்கள் சந்தேகத்திற்கிடமான பொருளை இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் இருந்ததால் அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும மண்டபம் கடற்காவல் நிலைய உதவி ஆய்வாளரால் விசாரிக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள் கொண்டு வந்த பவுடர் போதை பொருளோ அல்லது வெடிமருந்தோ இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது.

மேற்படி நபர்கள் விவசாய உரத்தினை மிக அதிக பணமதிப்பிற்காக இலங்கைக்கு அனுப்பவிருந்தது தெரிய வந்தது. இருப்பினும் இந்தச்செயல் சுங்கத்துறை சட்ட மீறலின்கீழ் வருவதால் மேற்படி இரு நபர்கள் மற்றும் அவர்கள் கொண்டு வந்த பொருட்களுடன் சட்டப்படி உரிய மேல் நடவடிக்கைக்காக மண்டபம் சுங்கத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது

ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை

https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr301122_2158.pdf


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback