2020-21 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் 2020-21 கல்வியாண்டில் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் 2023 ஜே.இ.இ. தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், பத்தாம் வகுப்பு மதிப்பெண்களை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2021ம் ஆண்டு கொரானா காரணமாக மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவில்லை; எனினும் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. தேர்வுகள் நடத்தப்படாததால் மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் விவரங்கள் எதுவும் குறிப்படப்படவில்லை. அதனால், 2020-21 கல்வியாண்டில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் மதிப்பெண்கள் இல்லாததால் ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், விண்ணப்பிக்க முடியவில்லை
இதனை அடுத்து தேசிய தேர்வு முகமையிடம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தேசிய தேர்வு முகமையும் இப்பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளது. மாணவர்கள் பதற்றம் அடையாமல் ஜே.இ.இ. தேர்வுக்கு தங்களை தயார் செய்யலாம் எனவும் பள்ளிக்கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்