Breaking News

சேலத்தில் குழந்தை கடத்த 400 பேர் வந்துள்ளார்கள் என பரவும் செய்தி உண்மை என்ன salem Kidnap rumour

அட்மின் மீடியா
0

 

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சேலத்தில் திடீரென நேற்று பகலில் 400 பேர் வெளிநாட்டில் இருந்து இறங்கி இருக்கிறார்கள். அதுவும் மெய்னா 7 வயசு, 8 வயசு 9 வயது, 5 வயது,இந்த மாதிரி பொன்னுங்கலைதான் அதிகமாக கடத்துறது, பசங்க எல்லாத்தையும் கடத்துறான்னுங்க

அதேமாதிரி பசங்களை வெளிய கடைக்குக்குன்னு அனுப்பாதீங்க அதே மாதிரி எல்லா குழந்தையும் பத்ரமா பாத்துக்குங்க

திடீர்ன்னு நேத்து இறங்கி இருக்காங்க, அதுல ஒருத்தன் பெண் வேஷத்தில் குழந்தையை தூக்கிட்டு போகும் போது பாதிவழியில் ஊர்க்காரங்க பிடிச்சுட்டாங்க. சேலத்தில் நேற்று நடந்தது. அவனை பிடிச்சு அடிச்சப்போ நாங்க 400 பேர் இறங்கியிருக்கோம்டா அப்டின்னு தில்லா சொல்றான் , என்னை புடிச்சிட்ட இன்னும் 399 பேர புடிக்கமுடியாது சொல்றான். என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
 
அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ சிரியாவில் 2013 ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் எடுக்கபட்டது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

முழு விவரம்:-
 
பலரும் ஷேர் செய்யும் அந்த ஆடியோ கடந்த 2018 ம் ஆண்டு முதல் இணையத்தில் பரவி வருகின்றது 
 
கடந்த 19.05.2018 ம் ஆண்டு தினமலர் இணையத்தள செய்தியில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் இருந்து, 400 குழந்தைகள் கடத்தப்பட உள்ளதாக, சமூக வலைதளங்களில், வதந்தி பரப்பியவரை, போலீசார், நேற்று கைது செய்தனர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, ராவுத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்த யாதவமூர்த்தி, 31, கட்டட தொழிலாளி. இவர், சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்ஆப்பில், திருப்பத்தூர் பகுதியில், வடமாநில கும்பல், 400 குழந்தைகள் கடத்தப்பட உள்ளதாக, அவரே பேசி, வீடியோ பதிவில், வதந்தியை வெளியிட்டார். மக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து, விசாரித்த திருப்பத்தூர் போலீசார், அவரை நேற்று, கைது செய்தனர் என செய்தி வெளியிட்டுள்ளார்கள்


அதேபோல்  கடந்த 20.02.2019 அன்றைய சமயம் இணையதள செய்தியில் 

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்ல காத்திருந்த போது 7ம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் போதையில் ஒருவர் என் கூட வா, வீட்டுக்குப் போகலாம் என அழைத்து பாலியல் சீண்டல் செய்துள்ளான். மேலும் மாணவியின் கையைப் பிடித்து, அவரை இழுத்துச் செல்ல முயன்றார். இதையடுத்து மாணவி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரிடம் இருந்து மாணவியை மீட்டனர்.இந்நிலையில் அந்த வாலிபர் குழந்தைகள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்து அவரை அடித்துள்ளார்கள்

சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், வாலிபரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடுமையாக எச்சரித்து அவரை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது என அதில் கூறப்பட்டுள்ளது

முடிவு:-

2018 ம் ஆண்டு வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பகுதியில் பரவிய பொய்யான ஆடியோவை எடுத்து 2019 ம் ஆண்டு தஞ்சை பேருந்து நிலையத்தில் குடி போதையில் நடந்த சம்பவ வீடியோவில் இணைத்து பொய்யாக பரப்பி வருகின்றார்கள் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback