அர்ஜெண்டினாவின் கோல்கீப்பர் இஸ்லாத்தில் இணைந்தார் என பரவும் வீடியோ உண்மையா!!! argentina football fan converts islam
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் 10/12/2022 அன்று கத்தாரில் விளையாடிய அர்ஜெண்டினா கோல்கீப்பர் இஸ்லாத்தில் இணைந்தார்... மாஷா அல்லாஹ் என ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியதில்
அந்த வீடியோவில் உள்ள நபர் அர்ஜெண்டினா கோல் கீப்பர் கிடையாது என்று அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது
அர்ஜெண்டினாவின் கோல்கீப்பர் பெயர் emiliano martínez அவரது புகைப்படம் கீழ் உள்ளது
ஆனால் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள நபரும் அர்ஜெண்டினாவின் கோல்கீப்பர் நபரும் வேறு வேறு நபர் ஆகும்.
மேலும் பலரும் ஷேர் செய்யும் வீடியோவை கடந்த 9ம் தேதி Quotes 4 life Quotings என்ற யூடியூப் பக்கத்தில் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் ரசிகர் ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தார் என பதிவிட்டுள்ளார்,
மேலும் பலர் யூடியூப்பில் அர்ஜெண்டினா கால்பந்து அணியின் ரசிகர் ஒருவர் இஸ்லாத்தில் இணைந்தார் என பதிவிட்டுள்ளார்கள்
முடிவு:-
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
https://www.youtube.com/watch?v=MV2OlAskcw4
https://en.wikipedia.org/wiki/Emiliano_Mart%C3%ADnez
https://www.youtube.com/results?search_query=Argentina+Fan+Accepted+Islam
Argentinian Football Fan Converts to Islam at Qatar World Cup
Tags: FACT CHECK மறுப்பு செய்தி