Breaking News

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி முழு ரிசல்ட் delhi corporation election aam aadmi party leading

அட்மின் மீடியா
0

டெல்லி மாநகராட்சி தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.இந்த நிலையில், டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது.

இந்திய தலைநகர் டில்லியில் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி ஆட்சி நடத்தி வருகின்றது இதில் உள்ள  250 வார்டுகள் கொண்ட மாநகராட்சிக்கு கடந்த 4ம் தேதி தேர்தல் நடந்தது, இதில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிட்டன, மேலும் கடந்த  2007 முதல் மாநகராட்சி பதவியை பாஜக கைப்பற்றி வந்த  நிலையில் இந்த தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெறலாம் என கருத்து கணிப்புகள் வெளியாகி  இருந்தது


கடந்த மாநகராட்சி தேர்தலில், பாஜக கட்சி 162 இடங்களையும் , ஆம் ஆத்மி கட்சி 50 இடங்களையும், காங்கிரஸ் 22 இடங்களையும் , சுயேட்சைகள் 13 இடங்களையும் பிடித்து இருந்தது 

நண்பகல் 2 மணி  நிலவரப்படி

ஆம் ஆத்மி:- 134  இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

காங்கிரஸ்:- 9 இடங்களில்வெற்றி பெற்றுள்ளது

பாஜக:-104  இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

சுயேட்சைகள் :- 3  இடங்களில் வெற்றி பெற்றுள்ளது

இதன் மூலம் கடந்த 15 ஆண்டுகளாக பாஜகாவின் பிடியில் இருந்த டெல்லி மாநகராட்சியை தற்போது ஆம் ஆத்மி கட்சி கைப்பற்றியுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback