Breaking News

FACT CHECK இராமநாதபுரத்தில் பறந்து வந்த சித்தர் என பரவும் வீடியோ உண்மை என்ன?? ramanathapuram flying siddhar

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கிராமத்தில் உள்ள புயல் காப்பகத்தில் 27.11.2022 இரவு காவலர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் எடுத்த வீடியோ சித்தர் பறந்து வருவதை பாருங்கள் என  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

 


அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

 

அந்த செய்தி பொய்யானது

யாரும் நம்பவேண்டாம் 

அப்படியானால் உண்மை என்ன? 

 

சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:- 

இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை கிராமத்தில் உள்ள புயல் காப்பகத்தில் 27.11.2022 இரவு காவலர்கள் தங்கி இருந்தனர். அவர்கள் எடுத்த வீடியோ சித்தர் பறந்து வருவதை பாருங்கள்  

 

உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ Joseph Njovu visuals என்னும் யூடியூப் சேனல் கிராபிக் செய்து வெளியிட்ட வீடியோ என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 

 

முழு விவரம்:- 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ ராமநாதபுரம் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ இல்லை பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் உள்ளது பறந்து வரும் சித்தர் இல்லை அந்த வீடியோவில் உள்ளது கிராபிக்ஸ் வீடியோ ஆகும் Joseph Njovu visuals எனும் யூடியூப் சேனலில் அந்த வீடியோ எப்படி தயாரிக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார்கள்.

 

முடிவு:- 

பலரும் கிராபிக்ஸ் வீடியோவை சித்தர் எனவும் அவர் பறந்து வந்தார் என்றும் இராமநாதபுரத்தில் நடந்தது என பொய்யாக பரப்பி வருகின்றார்கள் எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

 

அட்மின் மீடியா வீடியோ ஆதாரம்:-

https://www.youtube.com/watch?v=JRWA9Pq2mVs&t=650s 

https://www.youtube.com/watch?v=HIYe83-PvhQ&t=95s

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback