FACT CHECK சவூதி பள்ளிவாசல்களில் ஒலிபெருக்கி பொருத்த தடை என பரவும் செய்தி உண்மை என்ன !!Saudi Arabia restricts loudspeakers at mosques
அட்மின் மீடியா
0
கடந்த
சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் சவுதி அரேபியாவில் மசூதிகளில்
ஒலிபெருக்கி பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது - மேலும் மத நம்பிக்கை
உள்ளவர்கள் மசூதியில் இருந்து இமாமை அழைக்க தேவையில்லை... தொழுகை நேரத்தில்
கூப்பிடாமல் மசூதியில் இருக்க வேண்டும் - இந்த தடை சவுதி அரேபியாவின்
வரலாற்று முடிவு. என்று செய்தியையும் அதனுடன் ஒரு வீடியோவையும் பலரும்
ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
ம
ுழு விவரம்:-
சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், அழைப்பு மற்றும்
வழிகாட்டல் அமைச்சர் ஷேக் டாக்டர் அப்துல்லதீப் பின் அப்துல்அஸீஸ்
அல்-ஷேக் நாட்டிலுள்ள அனைத்து அமைச்சுக் கிளைகளுக்கும் கடந்த
01.06.2021 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்
சவூதி
அரேபிய பள்ளிவாசல்களில் தொழுகைகளுக்காக அழைக்கும் பாங்கு கூறும் போது,
மொத்த ஒலி அளவின் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் வகையில் பயன்படுத்த
வேண்டும்
தொழுகையை
மேற்கொள்ள வேண்டியவர்கள் பாங்கு சொல்லும் வரை இருக்கத் தேவையில்லை
என்றும் நேரத்துக்கு தொழுகையை நிறைவேற்றலாம்
மசூதிகளில் தொழுகைக்கான அழைப்புக்கு அல்லாது, முழு தொழுகை வேளைகளிலும்
வெளிப்புறமாக ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது தங்களுக்குத்
தொல்லை தருகிறது என மசூதிகளின் அருகில் வசிப்போர் கொடுத்த புகார்களின்
அடிப்படையில், தொழுகை அழைப்புக்கு அல்லாது முழு தொழுகைக்கும் வெளிப்புற
ஒலிப்பெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது
வ
ெள்ளிக்கிழமைகளில் நடக்கும் சிறப்புத் தொழுகைகள்,
ஆண்டுக்கு இருமுறை நடக்கும் பெருநாள் தொழுகைகள் மற்றும் மழை வேண்டி
நடக்கும் சிறப்பு பிராத்தனை தொழுகைகளில் மட்டும் வெளிப்புற
ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஐந்து வேளை தொழுகை
வேளைகளில் மசூதிகளின் உட்புறமாக மட்டுமே ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்திக்
கொள்ள வேண்டும்.
பொதுமக்களுக்கு
இடையூறாக இருப்பதாக முறையிட்டதை தொடர்ந்து, இவ்வாறு கட்டுப்பாடு விதிக்க
நடவடிக்கை எடுத்ததாக இஸ்லாமிய விவகார அமைச்சர் அப்துல் லதீப் அஷ்ஷெய்க்
தெரிவித்துள்ளார்.
அதாவது
சவூதி பள்ளி வாசல்களில் பாங்கு மற்ரும் இகாமத் மற்றும் தொழுகை என
அனைத்தும் பள்ளிவாசல்களில் உள்ள மினாராவில் உள்ள வெளிப்புற
ஒலிப்பெருக்கியில் அனைவருக்கும் கேட்கும் வகையில் இருந்தது.
ஆனால்
சவூதி குடியிருப்பு வாசிகள், மற்றும் வணிகர்கள், சுற்றுலா வாசிகள் என
பல்வேறு தரப்பினர் அளித்த புகாரை அடுத்து பாங்கு சத்தம் மட்டுமே வெளிபுற
ஸ்பீக்கரில் மொத்த ஒலி அளவின் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது
முடிவு:-
சவூதி அரசு வெளியிட்டு அறிவிப்பு கடந்த 01.06.2021 அன்று வெளியிட்டுள்ள
செய்தி ஆகும். அதில் பாங்கு தவிர தொழுகை களை வெளிபுற ஸ்பீக்கரில்
சொல்லத்தான் தடை செய்துள்ளார்கள் ஆனால் பள்ளிவாசலில் ஒலிப்பெருக்கிகளுக்கு
தடை என்பது பொய்யான செய்தியாகும்
எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
அட்மின் மீடியாவின் ஆதாரம்
Tags: FACT CHECK மறுப்பு செய்தி