Breaking News

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம் முழு விவரம் | ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி how To Apply PMEGP Loan Online

அட்மின் மீடியா
0

பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்னும் மானியத்துடன் கூடிய கடன் அளிக்கும் திட்டத்தினை இந்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஊரக மற்றும் நகா் பகுதிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவங்களை உருவாக்கி வேலைவாய்ப்பினை ஏற்படுத்த அனுமதி அளித்துள்ளது.



அதன் அடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம், கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணையம் (KVIC) மூலம் இத்திட்டத்தினை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது. மற்றும் மாநில அளவில் கதா் மற்றும் கிராமத் தொழில் ஆணைய இயக்குநரகம், மாநில கதா் மற்றும் கிராம தொழில் வாரியம் (KVIB) மற்றும் மாவட்ட தொழில் மையம் (DIC) மூலமாகவும் இத்திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. 

தற்போது வேலையில்லா இளைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க கடன் வரம்பை ரூ.50 லட்சம் வரை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.


திட்டத்தின் நோக்கம்:-

கிராம மற்றும் நகா்ப்புறங்களில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் பொருட்டு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்க முறையே ரூ.25 இலட்சம், ரூ.10 இலட்சம் வரை வங்கிக் கடன் பெற்று தொழில் துவங்க வழிவகை செய்தல். 

தகுதிகள்:-

குறைந்தபட்சம் வயது வரம்பு 18 ஆகும். 

ரூ.10 இலட்சத்திற்கு மேல் உற்பத்தி தொழில்கள் மற்றும் ரூ.5 இலட்சத்திற்கு மேல் சேவைத் தொழில்கள் துவங்க குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். 

குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை. 

இத்திட்டத்தின் கீழ் புதிதாக உருவாக்கப்படும் திட்டங்களுக்கு மட்டுமே உதவிகள் செய்யப்படும். 

தேவையான ஆவணங்கள்:-

ஆதார் அட்டை

முகவரி ஆதாரம்

சாதிச் சான்றிதழ்.

சிறப்பு வகை சான்றிதழ்

திட்ட அறிக்கை

கல்வி சான்றிதழ்

உள்கட்டமைப்பு விவரங்கள்

வங்கி கணக்கு 

உங்கள் திட்டத்தின் சுருக்கமான விவரங்கள்

திட்டத்தின் சிறப்பம்சங்கள்:-

இந்த திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு ரூ.25/- லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.அதோடு 35% மானியத்துடன் தொழில் துவங்குபவர்களுக்கு கடன் உதவி கொடுக்கப்படுகிறது.

பொதுப்பிரிவினருக்கான மூலதனப் பங்கு 10 விழுக்காடு. 

சிறப்புப் பிரிவினருக்கான மூலதனப் பங்கு 5 விழுக்காடு. 

பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் பெண்கள் மாற்றுத் திறனாளிகள் முன்னாள் இராணுவத்தினா் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மானியமாக திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு

நகா்புறங்களுக்கு 35 விழுக்காடு (ஊரக பகுதிகளுக்கும்) வழங்கப்படுகிறது. 

மாவட்ட தோ்வு குழு மூலம் நோ்காணல் செய்யப்பட்டு, மாதம் இருமுறை பயனாளிகள் தோ்வு செய்யப்படுவா். 

Project Report தயாரிப்பது எப்படி:-

நீங்கள் செய்ய போகும் தொழிலின் விவரம், 

இயந்திர உபகரணத்தின் விலை, 

மிஷின் மூலம் உற்பத்தி செய்யும் விவரம், 

மூல பொருட்கள் வாங்க போகும் விவரம், 

மாத வருமானம் விவரம், 

இதன் மூலம் 6 மாதத்திற்கான வருமானம் விவரம், 

வருடத்திற்கான வருமானம் விவரங்களை டைப் செய்து ஒரு பேப்பரில் பிரிண்ட் எடுத்து வைத்து கொள்ளுங்கள் 

விண்ணப்பிப்பது எப்படி? 

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.kviconline.gov.in என்ற இணையதள முகவரியின் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

முத்லில் மேல் உள்ள லின்ங்கை கிளிக் செய்து உள் நுழையவும் 

நீங்கள் உங்கள் வணிகத்தை தனித்தனியாக நடத்த விரும்பினால், நீங்கள் தனிப்பட்ட நபராக பதிவு செய்ய வேண்டும் 

முதலில் "தனிநபருக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவம்" விருப்பத்தை கிளிக் செய்யவும். 

அடுத்து அதில் PMEGP விண்ணப்பப் படிவத்தின் கீழ் தேவையான அனைத்து விவரங்களையும் நீங்கள் குறிப்பிட வேண்டும். 

விண்ணப்பதாரர் தரவைச் சேமி" பொத்தானைக் கிளிக் செய்யவும். 

விண்ணப்பத்தின் இறுதி சமர்ப்பிப்புக்குப் பிறகு, விண்ணப்பதாரர் ஐடி மற்றும் கடவுச்சொல் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.


PMEGP Loan scheme

PMEGP Loan Scheme 2022

Uyegp scheme details in tamil 

TAGSApply PMEGP Loan Online

how To Apply PMEGP Loan Online

பிரதம மந்திரி தொழில் கடன் திட்டம்

பாரத பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம்

பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம்

பாரதப் பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் 

பிரதமர் கடன் திட்டம் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள்

Tags: முக்கிய செய்தி வேலைவாய்ப்பு

Give Us Your Feedback