செயற்க்கை கர்பப்பை மூலம் குழந்தைகள் என பரவும் வீடியோ உண்மையா| Is The EctoLife Artificial Womb Real
செயற்க்கை
கர்பப்பை மூலம் ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் குழந்தைகளை உருவாக்கலாம் என
ஓர் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகின்றது அந்த வீடியோ பற்றிய ஓர்
பார்வை:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில்
புற்றுநோயால் கர்ப்பப்பையை இழந்த பெண்கள் மற்றும் பிற காரணங்களால் கருத்தரிக்க முடியாதவர்களுக்கு இது உதவும்.
அதோடு மக்கள் தொகை குறைவாக உள்ள ஜப்பான், பல்கேரியா, தென் கொரிய நாடுகளுக்கு இந்த செயற்கை கருப்பை வசதி பெரிதும் உதவும்.
தாயின் வயிற்றில் எப்படி ஒரு குழந்தை வளருmoமா, அப்படியே ஆய்வகத்தில் இந்த குழந்தை உருவாக்கப்படும். அதாவது தாயின் கருப்பையில் இருக்கும் திரவத்தை போலவே இதிலும் செயற்கையான திரவம் நிரப்பப்பட்டு அதில் கருவை வளர்க்கின்றனர்.
வளரும் கருவிற்கு செயற்கை தொப்புள்கொடி மூலம் செறிவூட்டப்பட்ட சத்துக்களை அனுப்புகின்றனர். அதேபோல் குழந்தையின் கழிவுகளையும் வெளியே எடுக்கப்படும்
தம்பதிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட கருவை ஒரு செயற்கை கருப்பையில் பொருத்துவதற்கு முன்பு மரபணு ரீதியாக அதை திருத்தி வடிவமைக்கும் வசதியை அளிக்கிறது. இதனால் குழந்தையின் புத்திசாலித்தனம், உயரம், வலிமை, முடி, கண் நிறம் போன்றவற்றைத் தேர்ந்தெடுத்து அதன் படி உருவாக்குவது, மேலும், மரபணு நோய்களை இந்த மரபணு திருத்தம் மூலம் தவிர்க்கலாம் என்கின்றனர்
மேலும் லேப்பில் உங்கள் குழந்தையின் ஒவ்வோர் அசைவையும், துடிப்பையும் பெற்றோர் தங்கள் மொபைல் போனின் மூலம் அறிந்து கொள்ள முடியும். குழந்தையின் லைவ் வீடியோவும், வளர்ச்சியின் டைம் லாப்ஸ் வீடியோவும் வழங்கப்படும்
ஒவ்வொரு வளர்ச்சி கருப்பை பெட்டிகளும் குழந்தையின் இதயத் துடிப்பு,
வெப்பநிலை, இரத்த அழுத்தம், சுவாச வீதம் மற்றும் ஆக்ஸிஜன் செறிவு உள்ளிட்ட
முக்கிய அறிகுறிகளைக் கண்காணிக்கக்கூடிய சென்சார்களைக் கொண்டுள்ளன.அவற்றை
அவ்வப்போது பெற்றோர் தங்கள் போனில் இருந்து பார்த்துக்கொள்ளும் வசதியும் அதில் இருக்கின்றது.
அந்த வீடியோ உண்மையா:-
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ ஏமன் நாட்டை சேர்ந்த ஹஷேம் அல்-கைலி என்பவர் தயாரித்த ஓர் கிரபிக்ஸ் வீடியோ ஆகும், அந்த வீடியோ அவரது சிந்தனையின் வடிவம் ஆகும்,
ஹஷேம் அல்-கைலி இவர் ஓர் அறிவியல் தொடர்பாளர் மற்றும் வீடியோ தயாரிப்பாளர் ஆவார், அவர் அறிவியல் முன்னேற்றங்கள் பற்றிய விளக்கப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தயாரிப்பதில் மிகவும் பிரபலமானவர்.ஆனால் அவர் விஞ்ஞானி கிடையாது,
அவர் தனது யூடியூப், இன்ஸ்டா பக்கத்தில் பல இதுபோல் அறிவியல் சார்ந்த அவரது கற்பனை வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.(அதாவது எதிர்காலத்தில் இதுபோல் நடக்கலாம் என்று)
தற்போது உலக நாடுகள் அனைத்திலும் அவர் கடந்த 9.12.2022 அன்று பதிவிட்ட செயற்க்கை கர்பப்பை பற்றிய வீடியோதான ஹாட் டாப்பிக்.
ஆனால் அவர் இதே போன்ற ஓர் வீடியோவை கடந்த 9.12.2020 ம் ஆண்டே பதிவிட்டுள்ளார். ஆதாரம்:- https://www.youtube.com/watch?v=3bP64x6ivkI
செயற்கை கருப்பை வீடியோ உண்மையானது அல்ல, ஆனால் எதிர்காலத்தில் இது உண்மையாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
இந்த நடை முறை சாத்தியமா:-
இந்த EctoLife வசதியை உருவாக்குவதற்கான உடனடித் திட்டங்கள் எதுவும் இல்லை, இதுபோல் எதிர்காலத்தில் உருவாகலாம் என்று ஹஷேம் அல்-கைலி தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்
இவரது இந்த சிந்தனை தற்போதைய கருவுறுதல் ஆராய்ச்சியின் நிலையிலிருந்து விரிவுபடுத்தியுள்ளது. இன்னும் பல ஆண்டுகளில் இது போல் நடப்பது சாத்தியமாகும் விஞ்ஞானம் வெகு தொலைவில் இல்லை என்று அல்-கைலி நம்புகிறார்,
ஹஷேம் அல்-கைலியின் கூற்றுப்படி, கருவுறாமை பிரச்சினைகள், தத்தெடுப்புக்காகக் காத்திருப்பது அல்லது கர்ப்ப சிக்கல்களைப் பற்றி கவலைப்படும் தம்பதிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக இருக்கும்.
தொழில்நுட்பம் கருச்சிதைவுகளை கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாற்றும் ஏன் என்றால் விஞ்ஞானத்தில் முடியாதது இல்லை என்றே கூறலாம் என அவர் கூறுகின்றார்.
வ
ிஞ்ஞானிகள் கருத்து:-
அதே சமயம் அந்த செயற்கை கருப்பை வீடியோ உண்மையானது அல்ல, ஆனால் எதிர்காலத்தில் அது போல் நடக்க வாய்ப்பு உள்ளது என்றே விஞ்ஞானிகள் கூறுகின்றனர்
லண்டனில் உள்ள huffingtonpost இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்
இதுபோல் செயற்க்கை கருப்பை நடக்கும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் என் வாழ்நாளில் அல்ல," என்று அவர் கூறுகிறார்.லண்டன் கிங்ஸ் கல்லூரியில் மகப்பேறியல் பேராசிரியராக இருக்கும் ஆண்ட்ரூ ஷென்னான், மேலும் இந்த வீடியோ உள்ள திட்டம் நீங்கள் நினைப்பது போல் வெகு தொலைவில் இல்லை என்றும், எதிர்காலத்தில், நாம் ஒரு செயற்கை மனித கருப்பையைப் பெறுவோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் இப்போதைக்கு, பல தொழில்நுட்ப மற்றும் சமூக சிக்கல்களை நாம் கடக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
நாம் எதிர்பார்தோமா தற்போது நடைமுறையில் உள்ள செயற்க்கை கருவுற்றல் பற்றி, வாடகை தாய் முறை பற்றி.சோதனை குழாய் மூலம் குழந்தை பெற்று எடுத்தல் பற்றி இவை அனைத்தும் விஞ்ஞானத்தால் சாத்தியமான ஒன்றுதான் அது போல் இதுவும் எதிர்காலத்தில் சாத்தியமான ஒன்றுதான் என லண்டன் கிங்ஸ் கல்லூரியில் மகப்பேறியல் பேராசிரியராக இருக்கும் ஆண்ட்ரூ ஷென்னான், கூறுகின்றார்.
ஆதாரம்:- https://www.huffingtonpost.co.uk/entry/is-ectolife-artificial-womb-real_uk_639858a2e4b0c28146469016
2017 ம் ஆண்டே இந்த செயற்கை கருப்பை உருவாக்க்கப்பட்டு விட்டது:-
2017 ஆம் ஆண்டிலேயே, விஞ்ஞானிகள் 'பயோ பேக்' மூலம் செயற்கை கருப்பை தொழில்நுட்பத்தில் ஒரு திருப்புமுனையை உருவாக்கினர்.
குறைமாத ஆட்டுக்கருவை விஞ்ஞானிகள் பலவாரங்களுக்கு செயற்கை கருப்பைக்குள் வைத்து உயிரோடு பாதுகாத்து வளர்த்து சாதனை படைத்திருக்கின்றனர்.
பிளாஸ்டிக் பைக்குள் ஆட்டின் கரு வளரத்தேவையான சத்துக்களடங்கிய பனிக்குடநீர் நிரப்பப்பட்ட்டு ஆட்டிற்க்கு செயற்கையான தொப்புள் கொடியையும் உருவாக்கி ஆட்டை வளர்த்துள்ளார்கள்.
அதே போல் செயற்கைக் கருப்பை குறைமாத மனித குழந்தைகளை பாதுகாக்க உதவுமெனவும் கூடுதல் ஆய்வுகளுக்குப்பின் இதை மனிதக்கருக்களில் சோதிக்க முடியுமென்றும் கருதுகிறார்கள்.
ஆதாரம் பிபிசி: https://www.youtube.com/watch?v=q7eqGYYC9CE
2019 ம் ஆண்டு குழந்தைகளுக்கான செயற்கைமுறை கருப்பை சோதனை
நெதர்லாந்து
மருத்துவ ஆராய்சியாளர்கள் குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு
செயற்க்கை கருப்பையில் வைத்து வளர்க்கும் சோதனையினை நடத்தி வெற்றி
பெற்றுள்ளார்கள்
ஆதாரம் பிபிசி: https://www.youtube.com/watch?v=HhxpMKK2Fpg
ஹஷேம் அல்-கைலியின்
https://twitter.com/HashemGhaili
https://www.youtube.com/@hashemalghailiofficialchannel/videos
https://hashem-alghaili.com/
https://en.wikipedia.org/wiki/Hashem_Al-Ghaili
https://www.facebook.com/photo/?fbid=675358094045063&set=a.568782714702602
TAGS:-
ectolife artificial womb fake
Artificial womb facility that grows 30,000 babies
What is EctoLife
World's first 'artificial womb facility' is real
The World's First Artificial Womb Facility
ectolife
Tags: FACT CHECK வெளிநாட்டு செய்திகள்