நடராஜ் பென்சில் பேக்கிங் வேலை என வலம் வரும் செய்தி உண்மையா?? பொய்யா?? முழு விவரம்| Natraj pencil packing job fake news
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் நடராஜ் பென்சில் பேக்கிங் வேலை வீட்டில் இருந்தே உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் உங்கள் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் நீங்கள் உட்காராமல் பேக்கிங் செய்தால் போதும் உங்களுக்கு மாதம் 30000 சம்பளம் கிடைக்கும் மேலும் 10,000 அட்வான்ஸ் பாஸ் கிடைக்கும் பிறகு உங்கள் வேலை அட்டை இங்கே பனேகா ஜாப் கார்டுக்கு ₹620 டெபாசிட் செய்ய வேண்டும், அதன் பிறகு பொருள் உங்கள் வீட்டிற்கு வரும் மற்றும் நீங்கள் வீட்டில் உட்கார்ந்து பேக்கிங் செய்ய வேண்டும். எனது வாட்ஸ்அப் எண் வணக்கம் எனக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பவும், நான் உங்களுக்கு முழு விவரங்களையும் அனுப்புகிறேன். வாட்ஸ்அப் மட்டும். .....XXXXXXXXX என்று ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்.
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் உண்மை என்ன?
சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்தி:-
நடராஜ் பென்சில் பேக்கிங் வேலை வீட்டில் இருந்தே உங்கள் வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களும் உங்கள் வீட்டில் இருந்து கொண்டு வரப்படும் நீங்கள் உட்காராமல் பேக்கிங் செய்தால் போதும் உங்களுக்கு மாதம் 30000 சம்பளம் கிடைக்கும் மேலும் 10,000 அட்வான்ஸ் பாஸ் கிடைக்கும் பிறகு உங்கள் வேலை அட்டை இங்கே பனேகா ஜாப் கார்டுக்கு ₹620 டெபாசிட் செய்ய வேண்டும், அதன் பிறகு பொருள் உங்கள் வீட்டிற்கு வரும் மற்றும் நீங்கள் வீட்டில் உட்கார்ந்து பேக்கிங் செய்ய வேண்டும். எனது வாட்ஸ்அப் எண் வணக்கம் எனக்கு வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பவும், நான் உங்களுக்கு முழு விவரங்களையும் அனுப்புகிறேன். வாட்ஸ்அப் மட்டும். .....XXXXXXXXX
உண்மை என்ன?
பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு நடராஜ் பென்சில் தயாரிப்பு நிறுவனமான Hindustan Pencils Private Limited நிறுவன அதிகாரபூர்வ இணையதளமான https://www.hindustanpencils.com/ சென்று பார்த்தால் அதில் அவர்கள் கடந்த 25.06.2022 அன்று யூடியூப் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்கள்
அந்த வீடியோவில் மேற்கண்ட செய்தி, ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, என பல மொழிகளில் பரவி வருகின்றது ஆனால் அந்த செய்தி பொய்யானது ஆகும் யாரும் நம்பவேண்டாம் என அதில் பதிவிட்டுள்ளார்கள், நாங்கள் அது போல் எந்த வித வீட்டில் இருந்து செய்யும் பென்சில் பேக்கிங் வேலை ஏதும் வழங்கவில்லை, எங்கள் பெயரை பயன்படுத்தி வலம் வரும் செய்தியினை யாரும் நம்பி உங்கள் ஆதார்,வங்கிவிவரம், ஓடிபி விவரங்களை அளிக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்கள்
மேலும் நட்ராஜ் பென்சில் நிறுவன அதிகாரபூர்வ பேஸ்புக் தளத்தில் நாங்கள் வீட்டில் இருந்து பேக்கிங் செய்யும் வேலை ஏதும் வழங்கவில்லை என்றும் ஏமாற்று காரர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்கள் இது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்