Breaking News

ரயில் நடைமேடையில் மஞ்சள் கோட்டிற்க்கு அருகே செல்போன் மூலம் மின்சாரம் இழுக்கப்பட்டு இறந்த நபர் என பரவும் வீடியோ உண்மை என்ன train platform yellow line current shock

அட்மின் மீடியா
0

 

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் நடைமேடையில் நின்று கொண்டிருக்கும் போது செல்போன் மூலமாக மின்சாரம் இழுக்கப்பட்டு உயிர் சேதம் ஆகவே நடைமேடையில் மஞ்சள் நிற கோட்டிற்கு அருகில் செல்ல வேண்டாம் என்று  ஒரு வீடியோவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 




அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


உண்மை என்ன? 

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ குறித்து நமது அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு அந்த வீடியோவை ஆராய்ந்தது, 
 
மேலும் அந்த வீடியோவை தனிதனி புகைபடமாக மாற்றி கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் ஸர்ச்சில் தேடியது 
 
அதன் முடிவில் பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோ கடந்த 08.12.2022  மேற்க்கு வங்காளத்தில் உள்ள காரக்பூர் ரயில் நிலையத்தில் பனிபுரியும் டிடிஆர் ஆவார்
 
மேலும் அன்றைய தினம் அவர் நின்று கொண்டு பேசி கொண்டு இருக்கையில் எதிர்பாரதவிதமாக மின்சார ஒயர் அறுந்து விழுந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என அட்மின் மீடியா உண்மை தன்மை கண்டறியும் குழு கண்டறிந்தது 
 

 
முழு விவரம்:-

பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவினை சற்று நிதானமாக பார்த்தால் அவர் மீது ஒயர் விழுவது தெரியும்
 
அதே போல் செல்போன் கொண்டு தான் அந்த நபர் மீது மின்சாரம் பாய்ந்தது என சொல்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது
 
பலரும் ஷேர் செய்யும் அந்த வீடியோவில் உள்ள சம்பவம் கடந்த 08.12.2022 அன்று மேற்கு வங்காளத்தில் உள்ள காரக்பூர் ரயில் நிலையத்தில், நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகர் சுஜன் சிங் சர்தார் மீது உயர் மின் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி அவர் தலைக்குப்புற ரயில் தண்டவாளத்தில் விழுந்தார்

இதில் ஆச்சர்யபடும் தகவல் என்னவென்றால் அவர் உயிருடந்தான் உள்ளார்

விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த  டிக்கெட் பரிசோதகர் சுஜன் சிங் சர்தாரை மீட்ட ரயில்வே ஊழியர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள் அதிர்ஷ்டவசமாக அந்த  அதிகாரி நலமாக இருக்கிறார் என இந்தியா டுடேவில் செய்தி வெளியிட்டுள்ளார்கள்

மேலும் மேற்க்கு வங்கத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் அந்த செய்தியின் வீடியோவை தன் டிவிட்டரில் பதிவிட்டு அவர் நலமுடன் உள்ளார் என தகவலையும் பதிவிட்டுள்ளார்


முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.indiatoday.in/amp/india/story/caught-on-cam-official-electrocuted-by-live-wire-at-kharagpur-railway-station-2306974-2022-12-08

https://twitter.com/pooja_news/status/1600728281481117698

https://zeenews.india.com/tamil/social/shocking-video-of-high-voltage-live-wire-falling-on-tte-standing-at-kharagpur-railway-station-423410

 

west bengal kharagpur railway station ttr viral video

railway station yellow line

railway station yellow line current shock

Shocking moment man is zapped by falling power line on train platform 

train platform yellow line current shock

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback