உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் பலி இந்தியாவின் 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் –உலக சுகாதார அமைப்பு
உஸ்பெகிஸ்தானில் நொய்டாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் AMBRONOL, DOK-1 Max ஆகிய 2 இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் பலியாகினர். மருந்தில் இருந்த எத்திலீன் கிளைகோல் என்ற வேதிப்பொருள், உயிரிழப்புக்கு காரணம் என ஆய்வில் தெரிவந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, நொய்டாவை சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் AMBRONOL, DOK-1 Max ஆகிய 2 இருமல் மருந்துகளை பயன்படுத்தாதீர்கள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உஸ்பெகிஸ்தானில் மரியான் நிறுவனத்தின் இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் இறந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் நாட்டில் சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர் இந்திய மருந்து நிறுவனம் தயாரித்த மருந்துகளை உட்கொண்டதால் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னால் Doc-1 Max syrup மருந்தை அதிகமாக எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டது. அதாவது நாள் ஒன்றுக்கு 3 அல்லது 4 முறை 2.5-5 மில்லி அளவில் ஒரு வார காலமாக மருந்தை உட்கொண்டுள்ளனர்.
அதன் பின்பு உடல் நிலை மோசமானதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் 18 பேர் இறந்துள்ளார்கள் உஸ்பெகிஸ்தான் நாட்டில் குழந்தைகள் மரணத்திற்கு காரணமான இந்தியாவின் நொய்டாவைச் சேர்ந்த மரியன் பயோடெக் தயாரித்த Ambronol and DOK-1 Max ஆகிய இரண்டு இருமல் மருந்துகளை குழந்தைகளுக்குப் பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார அமைப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags: இந்திய செய்திகள்