ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தேர்தல் குறித்து ராயபேட்டையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் ஈரோடு கிழக்கு நகர மாவட்டச் செயலாளர் சிவபிரசாத் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளத
ு
Tags: அரசியல் செய்திகள்