Breaking News

+2 பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் அகரம் விதை கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்!!! agaram foundation scholarship apply

அட்மின் மீடியா
0
+2 பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் அகரம் விதை கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்!!!

தொழில் நுட்பங்களும், தொடர்பு கொள்ளும் வசதிகளும் விரல் நுனிக்கு வந்துவிட்ட காலம் இது. தகவல் தொழில்நுட்பம் உலகின் அத்தனை தகவல்களையும் அள்ளித் தந்தாலும் வாய்ப்புகளும், வழிகாட்டல்களும் தேவைப்படும் கிராமப்புற முதல் தலைமுறை மாணவர்கள் இன்றும் தங்களின் கல்லூரிப் படிப்பிற்காக காத்திருக்கின்றார்கள். அத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் நகரங்களில் உள்ள பெருமைமிகு கல்லூரிகளில் பட்டப்படிப்பை பயில்வதற்கான வாய்ப்பினை உருவாக்கித் தருவதே அகரம் விதைத் திட்டம்

2010-ல் தொடங்கப்பெற்ற விதைத் திட்டம் வாயிலாக, கடந்த 13 ஆண்டுகளில் 4600-ம் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி கல்வி வாய்ப்பை பெற்றுள்ளார்கள். ஒத்த கருத்துள்ள கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தங்களைப் போன்ற தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்களின் அக்கறைமிகுந்த ஆதரவினால்தான் இது சாத்தியமாயிற்று. அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றிகளை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறது அகரம்

2023 2024 கல்வியாண்டில் கல்லூரியில் சேரவிருக்கிற மாணவர்களைத் தேர்வு செய்யும் பணிகளை தற்போது தொடங்கியுள்ளோம். கடந்த 13 ஆண்டுகளில் பயன்பெற்ற மாணவர்களின் தரவுகளை தொகுக்கையில் உங்கள் பகுதிகள் / பள்ளியை சேர்ந்த மாணவர்கள் எவரும் பயன்பெற்றிடாத நிலையை அறிந்து கொண்டோம். விதைத் திட்டத்தால் பயன்பெற்ற மாணவர்கள் இருக்கும் பகுதிகளில் பள்ளிகளில் இருந்தே ஒவ்வொரு ஆண்டுக்கும்மான விண்ணப்பங்கள் கல்வி உதவி கேட்டு வருகின்றன | தேர்வு பெறுகின்றன. வாய்ப்புகள் பெற்றிடாத இடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் வரும் ஆண்டுகளுக்கான திட்டங்களை வகுத்து செயல்பட தொடங்கியிருக்கிறோம். அதனடிப்படையில் தங்களை தொடர்பு கொள்கிறோம்

கிராமப்புற எளிய மனிதர்களுக்கான நம்பிக்கை அரசுப் பள்ளிகளும், ஆசிரியர்களுமே. மாணவர்களை தினசரி சந்தித்து உரையாடும் வாய்ப்பைப் பெற்றவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. ஆதலால், தங்கள் பள்ளியில் / பகுதியில் +2 படிக்கும் மாணவ மாணவியர் மத்தியில் அகரம் விதைத் திட்டம் பற்றிய விவரங்களை எடுத்துக்கூறி, உதவி தேவைப்படும் மாணவர்களை விண்ணப்பிக்கச் செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவிடவேண்டும் என்ற சிந்தனையின் செயலாக்கத்திற்காக சமூக மாற்றத்திற்கான தொடர் பணிகளில் தங்களோடு என்றும் இணைந்தே பயணிக்க விரும்புகிறோம்.


பள்ளி அளவிலான தேர்வுகுழு ஆசிரியர்களின் கவனத்திற்கு சில தகவல்கள் :

தலைமை ஆசிரியரின் தலைமையிலான, ஆசிரியர்களை கொண்ட குழு கலந்தாலோசனை செய்து பரிந்துரை செய்யும் இரண்டு அல்லது மூன்று மாணவர்கள் மட்டும் விண்ணப்பம்

அனுப்பினால் போதுமானது. படித்து முன்னேற வேண்டும் என்ற கனவோடு இருக்கும் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்

பொருளாதார, சமூகச் சூழலில் பின்தங்கியவர்கள், பெற்றோரை இழந்தவர்கள், வறுமையில் உழல்பவர்கள், மாற்றுத் திறனாளிகள்

விளையாட்டு, கலை என கல்வி இணை செயல்பாடுகளில் மிகுந்த ஈடுபாடுட்டுடன் சிறப்பிடம் பெற்றவர்கள்

கணிதம் மற்றும் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தும் திறன்பெற்ற மாணவர்கள் என தேர்ந்தெடுத்து பரிந்துரைக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். தொலைபேசி எண் இல்லாத மாணவர்களுக்கு ஆசிரியர் அல்லது பள்ளியின் தொலைபேசி எண்களை வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

அகரம் விதைத்திட்ட மாணவர் தேர்வுப் பணிகள் இப்பொழுதில் இருந்தே தொடங்கி நடைபெறும் இருப்பினும், பிளஸ்-டூ பொதுத் தேர்வு முடிவுகள் வந்தபிறகே உதவிக்குரிய மாணவர்கள் அறிவிக்கப்படுவர். அகரம் தேர்வுக்குழுவின் முடிவே இறுதியானது.

குறிப்பு :-

அகரம் விதைத்திட்ட மாணவர் தேர்வுப் பணிகள் இப்பொழுதில் இருந்தே தொடங்கி நடைபெறும். இருப்பினும், பொதுத் தேர்வு முடிவுகள் வந்தபிறகே உதவிக்குரிய +2 மாணவர்கள் அறிவிக்கப்படுவர். சமூக நோக்கோடு அகரமுடன் இணைந்திருக்கும் தன்னார்வலர்கள் மேற்கொள்ளும் சமூக பொருளாதார முன்னுரிமை அடிப்படையிலான தனித்துவமான தேர்வு முறை பின்பற்றுகிறோம். மாணவர் தேர்வில் அகரம் தேர்வுக் குழுவின் முடிவே இறுதியானது. இது அகரம் விதைத் திட்டத்திற்கான விண்ணப்பம் மட்டுமே. கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை என கல்லூரி மேற்படிப்பிற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் அந்தந்த காலக்கெடு அறிந்து தனித்தனியே விண்ணப்பித்திட வேண்டும்.


அகரம் விதைத் திட்டத்திற்கு விண்ணப்பித்திடும் முறை

1. மாணவர் தன் குடும்பச் சூழலை விளக்கி தன் கைப்பட விண்ணப்பக் கடிதம் எழுதவேண்டும் (பெற்றோர் செய்யும் வேலை, உடன்பிறந்தவர்கள் படிப்பு மற்றும்வேலை போன்ற விவரங்களுடன் எழுதவேண்டும்) 

2. அகரம் விதைத்திட்ட விண்ணப்பப் படிவத்தை', நகல் எடுத்து பூர்த்தி செய்திடவேண்டும். மாணவரின் தெளிவான வீட்டு முகவரி, தொலைபேசி எண்களுடன் படிவத்தில் இருக்கும் மற்ற விவரங்கள் சரியாக எழுதப்படவேண்டும். 


விண்ணப்பத்தில் இணைக்கப்பட வேண்டியவை :-

குடும்ப சூழல் கடிதம்

அகரம் விதைத்திட்ட விண்ணப்பப்படிவம்

10 மற்றும் +1 பொதுத் தேர்வு மதிப்பெண் சான்று நகல்(இணைய மதிப்பெண் சான்றே இருப்பின் அதன் நகல் அனுப்பலாம்)

4 சாதி சான்றிதழ்- நகல் | குடும்ப அட்டை - நகல் விண்ணப்பம் அனுப்பிடும் உறையின் மீது "அகரம் விதைத் திட்டம் - 2023" என குறிப்பிடப்படவேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:-

அகரம் ஃபவுண்டேஷன், 
15/8, கிருஷ்ணா தெரு, 
தியாகராய நகர், 
சென்னை - 600 017. 
தொலைபேசி : 044-43506361 / 9841891000

இணையதள முகவரி:-






agaram foundation application form 2023

agaram foundation application form 2023

surya agaram foundation

agaram foundation surya

agaram foundation by surya

agaram foundation phone number

agaram foundation chennai

how to apply for agaram foundation

agaram foundation contact number

agaram foundation address

how to apply scholarship in agaram foundation

surya agaram foundation contact number

agaram foundation owner

agaram foundation application form 2023npdf download

www agaram in scholarship application form 2023

agaram foundation address in tamil

how to join agaram foundation

agaram foundation scholarship application form 2023 pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback