கோவை நீதிமன்ற வளாகம் அருகே ரவுடி வெட்டிக் கொலை அதிர்ச்சி வீடியோ
கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல், தனியார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகினார். மற்றொருவர் பயங்கர வெட்டு காயங்களுடன்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,
கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகேயுள்ள கீரணத்தம் லட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் கோகுல் (23). இவர் மீது கொலை, கொள்ளை,வழிப்பறி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
வழக்கு தொடர்பாக கோவை மாவட்ட ஜே.எம்.2 நீதிமன்றத்திற்க்கு தனது நண்பரான சரவணம்பட்டியை அடுத்த சிவானந்தாபுரத்தைச் சேர்ந்த மனோஜ்(22) என்பவருடன் வந்திருந்தார் மேலும் நீதிமன்றம் பின்புறம் உள்ள பேக்கரியில் இருவரும் டீ சாப்பிட நின்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், கோகுலை கத்தி, அரிவாள் போன்றவற்றால் சரமாரியாக வெட்டினர். தடுக்க முயன்ற மனோஜையும் வெட்டினர். கழுத்தில் வெட்டப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் படுகாயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தலையில் வெட்டப்பட்டு ரத்தம் வழிந்த நிலையில் மனோஜ் காயமடைந்து கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீஸார், மனோஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்த கோகுலின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் கொலை செய்யப்பட்டவர் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பதும், படுகாயமடைந்த சிவானந்தா காலணியை சேர்ந்த மனோஜ் என்பதும் தெரியவந்தது.
எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/Naveen__talks/status/1625039795935408129
Tags: தமிழக செய்திகள்