வாட்ஸப் சூப்பர் அப்டேட் பலரும் எதிர்பார்த்த எடிட் வசதி முழு விவரம்
வாட்ஸ்அப் நிறுவனம் தன் பயனாளர்களுக்கு அடிக்கடி பல அப்டேட்கள் கொண்டு வந்து கொண்டுதான் உள்ளது
அந்த வகையில், தற்போது வாட்ஸப் பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜ்களை எடிட் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான கடந்த ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனம் இந்த வசதியை ஆண்ட்ராய்டு beta வெர்சனில் இந்த ஆப்ஷன் சோதித்து பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஐபோன் beta வெர்சனிலும் பரிசோதிக்கப்பட்டு வருகிறதாம்.
வாட்ஸ்அப்அனுப்பப்பட்ட மெசேஜ்களை சிறிது நேரம் பிரஸ் செய்தால் அதில் எடிட் ஆப்ஷன் வரும் என்றும் அதை கிளிக் செய்து அனுப்பப்பட்ட மெசேஜ்களை எடிட் செய்து கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த வசதி 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என்றும் 15 நிமிடங்களுக்குள் அனுப்பிய மெசேஜ்களுக்கான எடிட் ஆப்ஷன் வசதியை யூசர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.கூடிய விரைவில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தொழில்நுட்பம்