ஹஜ் செல்ல விண்ணப்பிக்கலாம் ஹஜ் கமிட்டி அறிவிப்பு how to apply haj online 2023 tamil
அட்மின் மீடியா
0
ஹஜ் கமிட்டியின் 2023 ம் ஆண்டுக்கான ஹஜ் புனித யாத்திரை அறிவிப்பு!!
ஹஜ் (Hajj) என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும்.
இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
உடல் நலமும் பணவசதியும் உள்ள இசுலாமியர் ஓவ்வொரும் தன் ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் செய்ய வெண்டும்.
இந்த புனிதப் பயணமானது ஹிஜ்ரி நாட்காட்டியின் படி 12 வது மாதமான துல் ஹஜ் 8 ஆம் தேதியில் இருந்து 12 ஆம் தேதி வரை நடைபெறும்.
ஹிஜ்ரி நாட்காட்டி சந்திர நாட்காட்டி என்பதால் ஆங்கில நாட்காட்டியை விட இது பதினொரு நாட்கள் குறைவாக இருக்கும். எனவே ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில நாட்காட்டியில் இந்த நாட்கள் மாறி வரும்.
இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் 2023-ற்காக விண்ணப்பிக்கும் முறை 10.02.2023 முதல் ஆன்லைனில் தொடங்கி, 10.03.2023 அன்று முடிவடைகிறது.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) மும்பை இந்திய ஹஜ் குழுவின் "HCol" செயலியினை ஆண்ட்ராய்டு கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
ஹஜ் 2023-ல், விண்ணப்பதாரர்கள் ஹஜ் விண்ணப்பப் படிவத்தை கட்டணம் ஏதுமின்றி இலவசமாக சமர்ப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்:-
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கோவிட்-19-க்கு எதிரான இரு தவணை தடுப்பூசிகளை செலுத்தி இருக்க வேண்டும்.
இயந்திரம் மூலம் படிக்கத் தக்க பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், குறைந்தது
03-02-2024 வரையில் செல்லக் கூடிய இயந்திரம் மூலமாக படிக்கத்தக்க
பன்னாட்டு பாஸ்போர்ட்டை
வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,
இரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல்
மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும்.
ஹஜ் புனிதப் பயணத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.இதனால் ஹஜ் புனிதப் பயணத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் மார்ச் 20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.