Breaking News

உடைந்த சூரியன்.." வீடியோ வெளியிட்டு மிரள வைத்த ஆராய்ச்சியாளர் முழு விவரம் sun's northern pole breaks off has been captured by NASA

அட்மின் மீடியா
0

சூரியினின் ஒரு பகுதி திடீரென தனியாக உடைந்து அதன் மேற்புறத்தில் சுற்றி வருகிறது. இது தொடர்பான புகைபடங்கள் , வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகின்றது



பூமி உள்ளிட்ட சூரியக் குடும்பத்தில் இருக்கும் எல்லா கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றது, பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் சூரியன் தான் அடிப்படை.சூரிய கதிர்கள் தான் இங்கு அனைத்து உயிரினங்களும் அடிப்படையாக இருக்கிறது.. 

இந்நிலையில் சூரியனின் ஒரு பெரிய பகுதி அதன் மேற்பரப்பில் இருந்து உடைந்து அதன் வட துருவத்தைச் சுற்றி ஒரு சூறாவளி போன்று சுழற்சியை உருவாக்கியுள்ளது.. இது எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்

ஆய்வாளர் டாக்டர் தமிதா ஸ்கோவ் என்பவர் தனது ட்விட்டரில் 

சூரியினில் வடக்கின் முக்கியப் பொருள் பிரிந்து இப்போது நமது நட்சத்திரத்தின் (சூரியன்) வட துருவத்தைச் சுற்றி ஒரு பெரிய சூறாவளி போன்ற ஒன்றை உருவாக்கி வருகிறது. அங்கு ஏன் இப்படி நடந்துள்ளது என்பதைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம்" என்று பதிவிட்டுள்ளார். 

சூரியனில் இருந்து எப்போதும் சோலார் பிளார்ஸ் வெளியாகும்.. இது சில நேரங்களில் பூமியில் உள்ள தகவல்தொடர்புகளைக் கூட பாதிக்கும். எனவே, சூரியனில் என்ன நடந்தாலும் அது ஆய்வாளர்களுக்குக் கவலையையே ஏற்படுத்தும்.. இதன் காரணமாகவே ஆய்வாளர்கள் இது தொடர்பாகத் தீவிரமான ஆய்வில் இறங்கியுள்ளனர்.என குறிப்பிட்டுள்ளார்

வீடியோ பார்க்க:-

https://twitter.com/TamithaSkov/status/1621276153075109888

Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback