Breaking News

தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் உதவித்தொகை ரூ.2 லட்சம் - தமிழ்நாடு அரசு அரசாணை

அட்மின் மீடியா
0

கட்டட தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 லட்சமாக அதிகரிப்பு - தமிழ்நாடு அரசு அரசாணை




கட்டட தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 லட்சமாக அதிகரிப்பு

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசானையில்:-

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் - தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர்கள் விபத்தில் மரணமடைந்தால் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/-ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (டி) எண்.75

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு(ஜி2)த் துறை நாள் 31.01.2023 சுபகிருது வருடம், தை - 17 திருவள்ளுவர் ஆண்டு 2054 படிக்கப்பட்டவை:

தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியச் செயலாளரின் கடிதம் எண். 12/29406/2022, நாள் 29.06.2022 மற்றும் 05.09.2022.

ஆணை:

மேலே படிக்கப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் கடிதங்களில், 25.05.2022 அன்று நடைபெற்ற 79வது வாரிய கூட்டத் தீர்மானம் இனம் 5-ன்படி. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2,00,000/- ஆக உயர்த்தி வழங்க ஆணை வெளியிடுமாறு கோரியுள்ளார்.

2. தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலாளரின் செயற்குறிப்பினை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்தில் நல நிதி செலுத்தும் தொழிலாளர் விபத்தில் மரணமடைந்தால், தொழிலாளர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் விபத்து மரண உதவித் தொகையினை ரூ.1,00,000/-லிருந்து ரூ.2.00.000/- ஆக உயர்த்தி வழங்கவும். இதனால் ஏற்படும் செலவினத்தை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய நல்ல நிதியிலிருந்து மேற்கொள்ளவும், மேலும், இந்த உயர்த்தப்பட்ட உதவித் தொகையினை 01.04.2023 முதல் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் ஆணையிடுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback