Breaking News

தமிழ்நாடு பட்ஜெட் 2023 என்ன என்ன அறிவிப்புகள் முழுவிவரம் TN Budget 2023

அட்மின் மீடியா
0

TN Budget 2023 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மூன்றாவது முறையாக இன்று சட்டப்பேரவையில் காலை 10 மணியளவில் நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்





தமிழ்நாடு பட்ஜெட் 2023  நேரலையில் பார்க்க


பட்ஜெட் சிறப்பம்சங்கள்:-

பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் முதல் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிப்பு 

வருவாய் பற்றாக்குறையை ரூ.62 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.30 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளோம்

உலகை ஆண்ட சோழர்களை போற்றவும், பண்பாட்டு கலைகளை போற்றவும் தஞ்சாவூரில் மாபெரும் அருங்காட்சியகம் அமைக்கப்படும்

இலங்கை மறுவாழ்வு முகாம்களில் 3,959 வீடுகள் கட்ட வரும் நிதியாண்டில் ₹223 கோடி ஒதுக்கீடு 

சென்னை கிண்டியில் கட்டப்பட்டு வரும் 1000 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை நடப்பாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்

தொழிற்சாலைகளில் பணியாற்றுவோருக்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் விரிவு செய்யப்படும்

அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும்

இந்து சமய அறநிலையத்துறை, வனத்துறையின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும், பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்

ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை 

மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூபாய் 1500 ஆகவும், கடுமையான பாதிப்பு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூபாய் 2000 ஆகவும் உயர்த்தப்படும்

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 30,000 கோடி அளவில் வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு

போர் மற்றும் போர் சார்ந்த நடவடிக்கைகளில் உயிரிழந்தால் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு வழங்கப்படும் ரூ. 20 லட்சம் நிதியுதவி ரூ. 40 லட்சமாக அதிகரிப்பு

பெருந்தலைவர் காமராஜர் கல்லூரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், வரும் நிதியாண்டிலும் ரூ. 200 கோடி செலவில் பாலிடெக்னிக், கலை அறிவியல் கல்லூரிகள் மேம்படுத்தப்படும்.

54 அரசு ஐ.டி.ஐ.க்கள் திறன்மிகு தொழிற்பயிற்சி மையங்களாக மாற்றப்படும்

மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்

ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாணவர்களுக்கான நவீன விடுதிகள் மதுரை, கோவை, திருச்சி மற்றும் நீலகிரி ஆகிய 4 இடங்களில் ரூ.100 கோடி செலவில் அமைக்கப்படும்.

ஈரோட்டில் தந்தை பெரியார் வனவிலங்கு சரணாலயம்

மரக்காணத்தில் பன்னாட்டு பறவைகள் மையம் அமைத்திட ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் 

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் 

சமையல் கியாஸ் மானியம் வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15 முதல் செயல்படுத்தப்படும்

சென்னை, ஆவடி, தாம்பரம், கோவை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட மாநகராட்சிகளில் முக்கிய பொது இடங்களில் இலவச வைஃபை (WiFi) வசதி செய்து தரப்படும்

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும். தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இந்த உரிமைத் தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கப்படுகிறது என்று நிதியமைச்சர் அறிவித்தார்

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பான, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு, பட்ஜெட்டில் இடம்பெறும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். எனவே, இந்த பட்ஜெட்டில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில் உரிமைத் தொகைக்கான அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிட்டார்.

பள்ளிக்கல்வித்துறையில், 1500 கோடி செலவில் வரும் நிதியாண்டில் வகுப்பறைகள், கட்டடங்கள் கட்டப்படும்

மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு 18,661 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback