தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வுமையம் தகவல்!
தமிழகத்தில் கோடை காலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில் அடுத்த 5 தினங்களுக்கான வானிலை நிலவரம் குறித்த சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தென்னிந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவக்கூடும். இதனால் இன்றும் நாளையும் (மார்ச் 26, 27) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, வருகிற 28 முதல் 30ம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் தகவல்
Tags: தமிழக செய்திகள்